பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி? அவர்களின் வசதியைக் கவனித்து, அவர்கள் உட் கார்ந்து கொண்டே மற்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கவும். அருகிலேயே சிறுநீர் கழிப்பதற்கேற்ற கழிவறைகள் இருப்பது போலவும் போன்ற சகல வசதி களையும் செய்து வைக்க வேண்டியது தலையாயக் கடமையாகும்.

போட்டியில் பங்கு பெற்று சாதனை புரிகின்ற பள்ளிகளின் வெற்றி எண்களையும், எந்தப் பள்ளி அல்லது எந்தக் குழு அதிக வெற்றி எண்களை எடுத்திருக்கின்றன என்பதனைப் பொது மக்களும், போட்டியில் பங்கு பெறுகின்ற அத்தனை பேர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொள்ள அத்தனை பேரும் ஆவலுடனே இருப்பார்கள்.

ஆகவே, அந்த வெற்றி எண்களின் மொத்த எண்ணிக்கையைக் குறித்துக் காட்டும் 'வெற்றி எண் பலகையை (Score Board), பந்தயத் திடலின் நடுவே நிறுத்தி வைத்திருப்பார்கள்.

அந்தப் பலகை நடுவே இருப்பதால் பயன் ஒன்றும் ஏற்பட்டு விடாது.எதிர்பார்த்த பலனும் கிடைத்து விடாது.

நன்கு பெரிய அளவிலே செய்த பலகையை, பார்வையாளர்களுக்கு நன்றாகத் தெரியும்படி, அருகிலே வைக்கின்ற ஏற்பாட்டைச் செய்தால், பொதுமக்களுக்கும் ஆர்வத்துடன் ஒவ்வொரு போட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு, உடலாளர்களை உற்சாகப்படுத்தவும், தொடர்ந்து