பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா [] 47 விளையாட்டு விழாவுக்குரிய பந்தய நிகழ்ச்சிகளைப் பிரித்து, எந்தெந்த நிகழ்ச்சி எவ்வெப்போது தொடங்க வேண்டும், தொடர வேண்டும், முடிக்க வேண்டும் என்றெல்லாம் நிகழ்ச்சி நிரலை அமைக்க வேண்டும்.

அதற்கு முன், விழா நடக்கப்போகும் ஊரிலே வசிக்கின்ற மக்கள், எந்தெந்த நிகழ்ச்சிகளை அதிகமாக விரும்புவார்கள் என்பதையும்; எந்தெந்த நிகழ்ச்சிகளில் அதிக ஆற்றலுள்ள உடலாளர்கள் போட்டியிடுகின்றார்கள் என்பதையும், எந்தெந்த நிகழ்ச்சிகள் மக்கள் மனதை மிகவும் கவர்ந்திழுக்கும் என்பனவற்றையெல்லாம், முன் கூட்டியே தீர விசாரித் துணர்ந்து, அந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் அன்றாடக் கடைசி நிகழ்ச்சிகளாக வைக்க வேண்டும்.

அந்த முறையானது, போட்டி நிகழ்ச்சிகள் அனைத்தையும் பொது மக்கள் கடைசி வரை ஆர்வத்துடன் இருந்து கண்டு களித்துச் செல்லவும், அதிகமான கூட்டம் இருப்பதால் உடலாளர்களும் உற்சாகத்துடன் போட்டியிடவும் கூடிய நல்ல சூழ்நிலையை நிலவ வைக்கும்.

அவ்வாறு நிகழ்ச்சிகளைப் பொறுக்கி எடுத்து அமைப்பது, எல்லோருடைய ஆர்வமும் குன்றாமல் இருக்குமாறு துண்டும் தன்மையில் அமையும். அதற்காக முன்னால் வைக்கின்ற நிகழ்ச்சிகளை யெல்லாம்' வழவழா கொழ கொழா' எனக் கூறுகின்ற தன்மையில் அமைத்து, பொது மக்களைப்' போர' டித்துவிடக் கூடாது.