பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா [] 51 5. அதிகாரிகளை நியமிக்கும் குழு பள்ளியில் நடைபெறுகின்ற விழா என்றால் அங்குப் பணியாற்றும் ஆசிரியர்களே அதிகாரி களாகப் பணியாற்றுவார்கள். நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளுக்கிடையே அல்லது வட்டம், மாவட்டம், மாநிலங்களுக்கிடையே நடக்கும் போட்டி என்றால், அனுபவமுள்ளவர்கள், முறையாகப் பயின்றவர் கள் எல்லோரும் அதிகாரிகளாக நியமிக்கப்படு வார்கள்.

பயிற்சி பெற்றவர்களே அதிகாரிகளாகப் பணியாற்றக் கிடைப்பார்கள் என்பது நிச்சயமல்ல. விழா நடக்கும் இடத்தைச் சேர்ந்த முக்கியமான வர்கள் கூட அதிகாரிகளாகப் பணியாற்றும்படி நேர்வதுண்டு . விழா நடத்தும் பகுதியிலே உள்ள முக்கியமான மனிதர்கள், விழாக் குழுவினருக்கு வேண்டிய நண் பர்கள், இவர்கள் தாங்களாகவே முன்வந்து அதிகாரி களாகப் பணியாற்றவும் விரும்புவார்கள். அவர்களை வேண்டாமென்றும் விலக்கிவிட முடியாது. அவர்கள் இல்லாமலும் காரியம் வெற்றிகரமாக நடக்காது என்ற நிலையில், அவர்களை நிச்சயம் பயன்படுத்திக் கொண்டே ஆக வேண்டும் . எனவே, அவர்களில் ஆற்றல் நிறைந்தவர்க ளாகப் பார்த்துத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். விழா நடப்பதற்கு முன்னால், முடிந்தால், பல முறை அவர்களை அழைத்து, ஒவ்வொருவருக்கும்