பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 TIL விளையாட்டு விழா நடத்துவது எப்படி? தரப்பட்டிருக்கும் பொறுப்பைப் பற்றியும், அந்தப் பொறுப்பினை நிறைவேற்றுவதற்குரிய விதிமுறை களைப் பற்றியும், அவர்கள் நடந்துகொள்ள வேண் டிய நடைமுறையைப் பற்றியும் விளக்கம் தரவேண்டி யது இன்றியமையாததாகும் . தாங்கள் என்ன செய்யவேண்டும்? தங்களுடைய கடமை என்ன? என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டால்தான், அவர்கள் தெளிவான செயலைப் பின்பற்ற முடியும் . ஏனென்றால், போட்டியிடும் உடலாளர்களில் ஒரு சிலர், அதிகாரிகளாகப் பணியாற்றக் கூடியவரின் அறியாமையையும், வழிமுறை பற்றிய அனுபவக் குறைவையும் புரிந்துகொண்டு, அதற்கேற்ப அவர் களை ஏமாற்ற முயற்சிப்பதும் உண்டு. அந்த நேரத்தில், அவர்கள் போகின்ற குறுக்கு வழியினை, மற்றவர்களும் பின்பற்ற வாய்ப்பும் உண்டு. . ஆகவே அரைகுறையாகத் தெரிந்தவர்களால் தெளிந்த தீர்ப்பை வழங்க முடியாது. சிறந்த முடிவையும் எடுக்க முடியாது. அதனால், குழப்பமும், எதிர்ப்பும், கூச்சலும் ஏற்படக்கூடும். எனவேதான், அதிகாரிகளாகப் பணியாற்றச் செல்வதற்கு முன்னரே, தாங்கள் ஆற்ற வேண்டிய கடமைக்குரிய அத்தனை விதிகளையும் செவ்வனே அறிந்து கொண்டு செல்ல வேண்டும்.

அனுபவமுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதற் காக அதிகாரிகளின் எண்ணிக்கையை அளவுக்கு அதிகமாக நியமிக்கக்கூடாது. அப்படி இருந்தால்,