எஸ். நவராஜ் செல்லையா I} 53 அவர்களின் கூட்டமே, நிகழ்ச்சிகளை மறைத்து விடும். அதனால், மைதானத்திற்கு வெளியே இருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள், குழப்பம் ஏற்படவும் நேரும்.
அதையுணர்ந்து, தங்களுக்கு வேலையில்லாத அதிகாரிகள், மைதானத்திற்குள்ளேயிருந்த உடனே தங்களுக்குரிய இடத்திற்கு வந்து அமர்ந்து கொள்ள வேண்டும். அதனால் பார்வையாளர்களுக்கும் நல்லது. போட்டியாளர்களுக்கும் நல்லது. . எத்தனையோ விளையாட்டு விழாக்கள், அதிகாரிகள் தங்களது ஆர்வத்தால் நிகழ்ச்சி நடந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டு நின்ற காரணத்தால், குழப்பத்திற்கு இட்டுச் சென்று, விழாவையே கெடுத்தே விட்டிருக்கிறது. இதுபோன்ற செயலை அதிகாரிக்கள் வேண்டுமென்றே விரும்பிச் செய்வ தில்லை. விளையாட்டிலே அவர்கள் மனம் அதிக மாகவே ஆழ்ந்து விடுவதால் தான் இப்படி அவர்களை அறியாமலேயே நிகழ்ந்து விடுகிறது . ஆகவே, பலவித செளகரியக் குறைவு ஏற்படு வதை முன்கூட்டியே உணர்ந்து, அதிகாரிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
இதுபோல அதிகாரிகள் கூடி நிற்பது, ஒட்டப் பந்தயங்களின் முடிவெல்லைக் கோட்டிலும், தாண்டும் இடங்களிலும் அதிகம் இருக்கும். ஆகவே, தவிர்ப்பனவற்றைத் தவிர்த்து, தகுந்தனவற்றை மேற்கொள்ளுதல் தக்காரின் செயலாகும்.