பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



58 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


இவர்களைத் தவிர, நீதிக்குழு என்றும், மைதானத் தலைவர் என்றும் பொறுப்பேற்பவர்கள் இருக்கின்றார் கள்.

நீதிக் குழு (Jury of Appeal): மாறுபட்டக் கருத் துடன் விவாதத்திற்கு வரும் அத்தனைக் கருத்துக் களையும் ஏற்று, நிதானத்துடன் ஆராய்ந்து, இந்தக் குழு உறுதியாக எடுக்கின்ற முடிவே இறுதியானது.

சில முடிவுகள், விதிகளுக்குட்படாதவை போல சில இக்கட்டான சூழ்நிலைகளில் ஏற்படும். அப் பொழுது தலைவர் செயலருடன் கூடி ஒர் இனிய சூழ்நிலை ஏற்படுகின்ற அளவுக்கு முடிவினை நிதான மாக எடுக்க வேண்டும்.

மாவட்ட, மாநில அளவில் நடக்கும் போட்டி களில் இதுபோன்று சூழ்நிலை அமைந்தால், அது பற்றியக் குறிப்பை உடனே அந்த நாட்டின் தலைமைக் கழகத்திற்கு அனுப்பிவிட வேண்டும்.

எதிர்ப்பு மனு: ஒரு உடலாளர் போட்டியில் பங்கேற்கும் தகுதி குறித்து ஏற்படும் எதிர்ப்புப் பற்றி, போட்டித் தொடங்குவதற்கு முன்னரே நீதிக் குழுவிற்கு எதிர்ப்பைத் தெரிவிப்பவர் அறிவித்துவிட வேண்டும்.

அதற்குரிய நீதிபதியாக யாரும் அதுவரை யிலும் நியமிக்கப்படவில்லை யென்றால், நடுவரிடம் கூற வேண்டும். அந்தப் பிரச்சினையும் போட்டிக்கு முன்னே, திருப்திகரமாகத் தீர்க்கப்படவில்லை யென்றால், 'முடிவாகாத பிரச்சினை’ என்ற முறையில்