பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எஸ். நவராஜ் செல்லையா [] 59


பங்கேற்கச் செய்து, அந்தச் சேதியைத் தலைவர், செயலருக்குத் தெரிவிக்க வேண்டும்.

மாவட்ட, மாநிலப் போட்டி என்றால், அச் சேதியைத் தலைமைக் கழகத்திற்கு உடனே தெரிவித்து விட வேண்டும்.

நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, நிகழும் குழப்பத்தின் காரணமாக ஏற்படும் எதிர்ப்புக்களை உடனடியாகவோ, அல்லது முடி வினை அதிகாரிகள் அறிவித்த 30 நிமிடத்திற் குள்ளாகவோ, அல்லது அந்த நிகழ்ச்சி நடந்த 15 நிமிடத்திற்குள்ளாகவோ தெரிவித்துவிட வேண்டும்.

எந்த எதிர்ப்பு மனுவையும், எழுத்தின் மூலமாக சம்பந்தப்பட்டக் குழுவின் நிர்வாகிக்கோ, அதி காரிக்கோ அல்லது நீதிக் குழுவுக்கோ, விழாக் குழுவினர் முன்னரே குறிப்பிட்டிருக்கும் பணத்தைக் கட்டணமாகக் கட்டி எழுதிக்கொடுக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படவில்லையென்றால் கட்டணம் திருப்பித்தரப்படமாட்டாது.

மைதானத் தலைவர் (Marshal) மைதானத்தைப் பற்றிய பொறுப்பு முழுவதையும் அவரே நிர்வகித்துக் கொள்கின்றார்.

நிகழ்ச்சிகளை நடத்துகின்ற அதிகாரிகளையும், போட்டிகளில் பங்கேற்கின்ற உடலாளர்களையுந் தவிர, வேறு யாரையும் காரணமின்றி மைதானத் திற்குள்ளே இவர் அனுமதிப்பதில்லை. அனுமதிக் கவும் கூடாது.