பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



60 [ ] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


தமக்குரிய உதவியாளர்களை அவ்வப்போது அவர் அழைத்து, தேவையான ஆணைகளைப் பிறப் பித்து, தானளித்த ஆணைகள் முறையாக நிறை வேற்றப் படுகின்றனவா என்பதையும் கவனித்துக் கொள்கின்றனர்.

மைதானத்தைச் சுற்றிலும் இவர் சென்று தேவையான காரியங்களையும் பார்த்துக் கொள்வ தோடு, மைதானம் எப்பொழுதும் போட்டி நிகழ்ச்சி களுக்காகப் பயன்படுகின்றதா என்பதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்திப் பணியாற்றுகின்றனர்.

இனி, மைதானத்திற்குள்ளே பணியாற்றும் அதிகாரிகளையும் அவர்களது பணிகளைப் பற்றியும் காண்போம்.

ஒட்டப் பந்தய நிகழ்ச்சிகளுக்குரிய அதிகாரிகள் 1.நடுவர் (Referee) 2. ஒடவிடுபவர் (Starter) 3.ஒடவிடுபவரின் உதவியாளர்கள் (Starter’s Assistants) 4.துணை நடுவர்கள் (Umpires) 5. வட்டக் குறிப்பாளர்கள் (Lap Scorers) 6.நேரக் குறிப்பாளர்கள் (Time Keepers) 7.முடிவெல்லைத் துணை நடுவர்கள் (Judges at the Finish)