பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எஸ். நவராஜ் செல்லையா [T] 61


(Referee)

நடுவராகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றவர், தனக் குரியப் பொறுப்பைப் பற்றிய கடமைகளுக்குரிய விபரங்களை முற்றிலும் அறிந்தவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு போட்டி நிகழ்ச்சியைப் பற்றியும் நன்கு தெரிந்தவராக இருந்தால்தான், துணை நடுவர்கள் தங்களுக்குள்ள மாறுபட்டக் கருத்தினைக் கொள்ளும் பொழுதும், உடலாளர்கள் ஏதாவது பிரச்சினையை எழுப்பும்பொழுதும் சரியான முடிவினைக் கூற முடியும் . நிகழ்ச்சிகள் அனைத்தும் விதியின் வழியே நடைபெறுகின்றனவா என்பதுடன், இறுதியான முடிவெடுக்கக்கூடிய வல்லமையும் அதிகாரமும் இவருக்கு உண்டு.

எந்த நிகழ்ச்சிக்கும், யாரையும் அனுப்பி வைக்கின்ற அதிகாரமும் இவருக்கு உண்டு. தகறாறு நடக்கின்ற இடங்களிலோ அல்லது சரியான முடிவெடுக்க முடியாத நிலைகளிலோ, தகுந்தஅதிகாரியை நியமிக்க நடுவருக்கு பூரண அதிகாரம் உண்டு.

துணை நடுவர்களுக்குள்ளே ஏதாவது கருத்து வேற்றுமை தோன்றி ஒரு நிகழ்ச்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தால், அதை மாற்றவும், வேண்டுமென்றால், மீண்டும் நடத்த வேண்டும் என்ற ஒர் முடிவெடுத்தால், அதை அன்றைக்கே நடத்தலாம் அல்லது மறுநாள்