பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?

 நடத்தலாம் என்ற ஒர் முடிவெடுக்கும் அதிகாரமும் நடுவருக்கு உண்டு. எறிபரப்பு அல்லது தாண்டுகின்ற பகுதிகள் பந்தயத்திற்கு ஏற்றவாறு இல்லையென்று நடுவர் கருதினால், நிகழ்ச்சியை வேறு இடத்தில் நடத்துவதற்குரிய இடத்தில் மாற்ற நடுவருக்கு முழு அதிகாரம் உண்டு. ஆனால், பங்குபெறும் அனைவரும் ஒரு முறை தாண்டுகின்ற அல்லது எறிகின்ற வாய்ப்பினைப் பெற்ற பிறகே இடத்தை மாற்றலாம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

2. ஓடவிடுபவர் (Starter) ஒட்டப் பந்தயங்கள் தொடர்பான எல்லா நிகழ்ச்சிகளுக்கும் இவரே பொறுப்பேற்று, உடலாளர்களை ஒட விட்டு, நிகழ்ச்சிகளை நடத்தி வைக்கிறார்.

ஒடவிடுபவரின் உதவியாளர்கள், உடலாளர்களை சோதனை செய்து. ஒடுவதற்குத் தயாராக அவரவரது ஒடத்தொடங்கும் இடத்தில் நிற்க வைத்த உடனேயே, இவரது பணி தொடங்குகிறது. உடலாளர்கள் அத்தனை பேரையும் இவரே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஒட்டத் தொடக்கத்தைப் பற்றிய தவறுக்கும்; அதனால் ஏற்படுகின்ற நிகழ்ச்சிகளுக்கும் இவரே முழுப் பொறுப்பேற்கின்றார்.

200 மீட்டர், 400 மீட்டர் (அரைவட்டம் அல்லது முழுவட்டம்) ஒட்டப்பந்தயங்களுக்கு, உட்லாளர்களுக்குத் தெரியும்படியான இடத்தில் நின்றுதான்