பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா 口 63

 ஒட்டத்திற்கான அறிவிப்பையும், சைகை ஒலியையும் தரவேண்டும்.

தான் கொடுக்கின்ற கட்டளையின் ஒலி கேட்காத பொழுது, பேசும் குழல் (மைக்ரோபோன்) உதவியால் பேசி, கட்டளையை அறிவிக்க வேண்டும்.

ஆனால் அவர் எங்கு நின்றாலும் ஒட்டத்தில் பங்கு பெறுகின்ற அத்தனை பேரையும் நன்றாகக் கண்காணிக்கின்ற இடத்தில் நிற்பதுதான் சிறந்த முறையாகும்.

உடலாளரின் உடலில் எந்தப் பாகமாவது, ஒடவிடும் ஒலி கேட்பதற்கு முன், ஒடத் தொடங்கும் கோட்டில் பட்டாலும் சரி, அல்லது ஒலி கொடுக்கும் முன் ஒடத் தொடங்கி விட்டாலும் சரி, அது தவறான ஒட்டத் தொடக்கமாகும்.

துப்பாக்கியால் அல்லது அது இல்லாத பொழுது விசிலால் ஒலி எழுப்பி ஓட விடலாம்.

எல்லா ஒட்டக்காரர்களுக்கும், தங்களுக்குரிய இடங்களில் அசையாமல் (Still) ஒடுவதற்குத் தயார் நிலையில் நின்ற பிறகே, ஒடுகின்றதற்கு ஒலி எழுப்பும்சைகையைக் கொடுக்க வேண்டும்.

எந்த ஒட்டப் போட்டியானாலும் சரி, உடலாளர்களை ஒட விடுவதற்கு முன்னர், ஒட விடுபவர் தலைமை நேரக்காப்பாளரிடம் ஒலி எழுப்பி, சைகை செய்ய வேண்டும். அவரும் தயார் என்று கூறி சம்மதம் பெற்ற பிறகே, ஒடவிட வேண்டும்.