பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எஸ். நவராஜ் செல்லையா [] 69


அடிக்கடி அதிகாரிகளுக்குள்ளே குழப்பமும் தகராறும் ஏற்படும். அதைத் தடுக்க இதோ ஒரு புது யோசனை.

ஒட்டம் முடிவடையக் கூடிய முடிவெல்லைக் கோட்டிலே ஊன்றியிருக்கும் முடிவெல்லைக் கம்பத்தில் அவர்கள் ஒடக்கூடிய வட்டங்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிக்கும் எண்கள் எழுதிய அட்டைகளை மாட்டிவிட்டிருக்கலாம். ஒரு வட்டம் முடிந்த பிறகு குறைந்த எண்ணிக்கை உள்ள அட்டையை மாட்டலாம். உதாரணமாக, மொத்தம் ஒடக்கூடிய வட்டங்களின் எண்ணிக்கை 8 என்றால், முதலில் 8, பிறகு 7, 6, 5, 4,3,2, என்று குறைத்து மாற்றிக் கொண்டே வந்து, கடைசி வட்டத்திற்கு மணி ஒலி மூலமாக அறிவித்து விடலாம். இப்படிச் செய்தால் எல்லாருக்கும் எத்தனை வட்டம் முடிந்திருக்கிறது என்பதைப் பற்றிய நிலை தெளிவாகப் புரியும்.

6.நேரக் குறிப்பாளர்கள் (Time keepers) நல்ல அனுபவமுள்ளவரையே நேரக்காப்பாள ராக நியமிக்க வேண்டும். நல்ல கடிகாரம் இருந்தால் மட்டும் நல்ல நேரக்காப்பாளரை உருவாக்கிவிட முடியாது.நேரக்காப்பாளர்கள் ஒடவிடுபவரோடு முழு மனதாக ஒத்துழைத்தால் சரியான நேரத்தைக் காண முடியும்.

நேரக்காப்பாளர்கள், முடிவெல்லைக் கோட்டி லிருந்து 5 மீட்டர் (16 அடி 6 அங்குலம்) தூரத்தில், முடிவெல்லைத் துணை நடுவர்கள் அமர்ந்திப்பதற்கு