பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். நவராஜ் செல்லையா 5

விளையாட்டு விழாக்கள் நாடெங்கும் பெருகட்டும்! வீரர்கள் கூட்டம் உருவாகட்டும்! தங்கப் பதக்கங்களை வென்று வந்து, நமது தாயகத்திற்குப் புகழ் சேர்க்கட்டும்.

விளையாட்டு விழாக்களினால்தான் இதுபோன்ற இனிய சூழ்நிலையை உருவாக்க முடியும் என்ற என் எண்ணத் தின் விளைவே இந்நூல்.

விளையாட்டுத் துறையில் தமிழிலக்கிய நூலாக வரு கின்ற இந்நூல், எனது பத்தாவது படைப்பாகும்.

அறிஞருலகும், பொதுமக்களும், இதுகாறும் எனக்கு ஆதரவு தந்து ஆர்வமூட்டியது போலவே, இந்த நூலையும் ஏற்று உற்சாகம் தர வேண்டுகிறேன்.

நான்காம் பதிப்பாக இந்நூல் மலர்கிறது. உரிய நேரத்தில் நூல் வெளிவர உதவிய நண்பர் திரு. எம். எஸ். மணி,திரு. சு. சாக்ரட்டீஸ் அனைவருக்கும் என் நன்றி.

ஞானமலர் இல்லம் எஸ். நவராஜ் செல்லையா

சென்னை - 17 

1972 ஜூன், 1974 ஜூலை, 1976 ஜூன், 1978 ஜனவரி என்று பலபதிப்புகள் வெளிவந்து தற்போது நீண்ட இடை வெளிக்குப் பிறகு ஐந்தாம் பதிப்பில் காலத்திற்கேற்ற சில திருத்தங்களுடன் எங்கள் எஸ். எஸ். பப்ளிகேஷன் வாயிலாக வெளியிடுகிறோம்.

1978ல் வெளிவந்த ஆசிரியரின் முன்னுரை அப்படியே இங்கு இடம் பெற்றுள்ளது. பதிப்பாளர்