பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



70 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


எதிர்ப்புறமான பகுதியில், ஒடி வருவோரை நன்கு பார்க்கவும், கண்காணிக்கவும் இயன்ற உயர்ந்த இடத்தில் அமர்ந்திருப்பார்கள். அதுதான், பெரிய அளவில் நடக்கின்ற விழாவில் சரியான இடமாகும்.

நேரக்காப்பாளராக மூவர் பணியாற்றுவர். அவர்களில் ஒருவர் தலைமை நேரக்காப்பாளராக இருப்பார்.

இந்த மூவரையும் தவிர ஒரிரண்டு பேர், மாற்று நேரக்காப்பாளராக, இரண்டாவதாக ஒடி வரு வோருக்கு நேரம் பார்ப்பார்கள். இந்த நேரத்தைக் கணக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை.

அதிகாரப்பூர்வமான நேரத்தை அறிவிக்க மூன்று நிறுத்துக் கடிகாரங்கள் (Stop waches) தேவைப் படுகின்றன.

நேரக்காப்பாளர்கள் மூவரும், தனித்தனியாகவே, சுதந்திரமாகவே தங்கள் கடிகாரத்தின் மூலம் ஒடி வருவோரின் நேரத்தைக் குறித்து, அதிலே தமது கையொப்பத்தை யிட்டு, தலைமைக் காப்பாளரிடம் தந்துவிட வேண்டும். அதற்கு முன்னே, யாரிடமாவது காட்டவோ, அது பற்றி கலந்தாலோசிக்கவோ வேண்டும் என்பது அவசியமுமில்லை. கட்டாயமும் இல்லை.

துப்பாக்கியின் (ஒலி எழுப்பிய உடன் தெரியும்) புகை தெரிந்தவுடனேயே, கடிகாரத்தை ஒடவிட வேண்டும்.