பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா [] 71


ஒடிவருபவரின் காலோ, கையோ, பாதமோ, கழுத்தோ, தலையோ, முன்கையோ, அல்லது உடலின் ஏதாவது ஒரு பாகம், முடிவெல்லையைத் தொட்ட உடனேயே, கடிகாரத்தை நிறுத்திவிட வேண்டும். ஒட்டம் முடியப் போகின்றதற்கு 15 கெஜ தூரத்தி லிருந்தே மிகவும் கவனத்துடன் ஒடிவருபவர்களைக் கண்காணித்துக் கொண்டே வரவேண்டும். அப் பொழுது, கடிகாரத்தை நிறுத்துகின்ற விரலைப் பயன்படுத்துவதற்காகத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

இருவரிடம் பெற்ற நேரக் குறிப்புகளைக் கொண்டு தலைமை நேரக் காப்பாளர், வேறு ஒரு தாளில் நேரத்தைப் பதிவு செய்து கொண்டு, அதிகார பூர்வமான நேரத்தை அறிவிப்பார்.

மூன்று பேர்களில், இருவரின் கடிகார நேரம் ஒத்திருந்து ஒருவரது நேரம் ஒத்திருக்காமற் போனால், இருவரின் கடிகாரம் காட்டும் நேரமே சரியான நேரமாகும்.

மூன்று கடிகாரமும் ஒன்று போல் இல்லாமல் வெவ்வேறு நேரங்காட்டினால், மூன்று நேரங் களுக்கும் இடைப்பட்ட நேரமே (Middletime) அதிகார பூர்வமான நேரம் என்று கொள்ள வேண்டும்.

கடிகாரத்தின் முள், இரண்டு எண்களுக்கிடையே நின்றுவிட்டால், அதிக நேரங் காட்டும் எண்ணெயே நேர்ந்தெடுக்க வேண்டும்.