பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



72 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


இயங்குகின்ற கடிகாரம் இரண்டே இரண்டு மட்டும் இருந்து, அவைகளின் நேரமும் வெவ்வேறாக இருந்தால், அதிக நேரம் காட்டுகின்ற நேரக் குறிப்பையே சரியானதாகக் கொண்டு நேரத்தைக் குறிக்க வேண்டும்.

நேரங்களை வினாடியாகவும், அதற்குள்ள பின்ன மாகவும் குறிப்பதுடன், ஒவ்வொரு வட்டத்தையும் எவ்வளவு நேரத்தில் கடந்தார் என்பதையும் குறித்தால் நலமாக இருக்கும். 800 மீட்டரிலிருந்து 3000 மீட்டர் வரையுள்ள ஒட்டப் பந்தய நிகழ்ச்சிகளில் இம் முறையைப் பின்பற்றலாம்.

தேசிய ஒட்டப் பந்தயங்களில் மின்சாரத்தால் இயங்கும் கடிகாரத்தையே பயன்படுத்த வேண்டும்.

உலக 'வெற்றிச் சாதனை'யை கணக்கிடுவது எவ்வாறு? (World Record)

எங்கேயாவது ஒரிடத்தில், விளையாட்டுப் பந்தயம் நடைபெற்று, அதில் நிகழ்ந்த ‘வெற்றிச் சாதனை உலக சாதனைக்குமேல் (Record) என்று தெரிந்தால், அந்தக் குறிப்பிட்ட நாட்டில் உள்ள 'அகில உலக அமெச்சூர் விளையாட்டுப் பந்தயக் கழக உறுப்பினர்', அதைத் தீர விசாரித்து, சிறிதும் தாமதப் படுத்தாமல், தலைமைக் கழகத்திலிருந்து (A.I.F.F.) அதற்கான மனு ஒன்றை வாங்கித் தேவையான எல்லாக் குறிப்புகளையும் உரிய முறையில் பூர்த்தி செய்து, 6 மாதத்திற்குள் அனுப்ப வேண்டும்.