பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா 73

வெற்றிச் சாதனையை ஏற்படுத்திய வீரர் வெளிநாட்டுக்காரராக இருந்தால், அதற்கான நகல் மனு ஒன்றையும் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அந்த மனுவில், பந்தயம் நடைபெற்ற நாள், இடம், நேரம், காலநிலை, பந்தயப் பாதை அல்லது பந்தயக் களத்தின் நிலை, காற்றின் வேக நிலை, பந்தயக் களத்தின் இட அமைப்பு, போட்டி நடைபெற்ற விதம், போட்டி முடிவின் உயரம், நேரம் அல்லது தூரம் முதலியவற்றை சரியாக அறிவித்து, அகில உலக விதிகளின் படியேயுள்ள விளையாட்டு சாதனங்களை வைத்துத்தான் சாதனை தேர்ந் தெடுக்கப்பட்டதா என்பதையும் விரிவாகக் குறிப்பிட வேண்டும்.

போட்டி நடைபெற்ற இடம் உள்ளாடும் அரங்கமாகவோ (Indoor) அல்லது பலகைப் பரப் பாலான தரையமைப்பிலோ இருந்தாலோ அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

ஒட்டப் பந்தயமாக இருந்தால, தகுதி பெற்ற தேசியக் கழகத்தாரால் ஒப்புதல் கொள்ளப்பட்ட நேரக் காப்பாளர்களால்தான்' நேரம்’ எடுக்கப் பட்டிருக்க வேண்டும். அந்தக் குறிப்பிட்ட நேரம் காட்டியான ; 'நிறுத்துக் கடிகாரங்கள் கூட', தலைமை நேரக் காப்பாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

பந்தயக் களமாக இருந்தால், மூன்று களதுணை நடுவர்கள் தகட்டாலான அளவை நாடாவினால்