74 விளையாட்டு விழா நடத்துவது எப்படி? அளந்திருக்க வேண்டம். அவ்வாறு அளக்கப் பயன் படும் கருவியும் அரசாங்கத்தாரின் பரிசீலனைக்குட் பட்டிருந்ததாகவும் இருக்க வேண்டும்.
தாண்டிய அல்லது எறிந்த தூரத்தை அல்லது உயரத்தை மீட்டர் அளவில் தருவது நல்லது.
மனுவை ஏற்றுக் கொண்ட தலைமைக் கழகக் குழுவின் தலைவர், செயலாளர், அதனை முறையோடு பரிசீலிப்பார்கள். அவர்களுக்கு அந்த வெற்றிச் சாதனையைப் பற்றி ஏதேனும் ஐயம் வந்தால், அந்தக் குழுவிற்கே முடிவினைக் கூறுகின்ற பொறுப் பினையும் விட்டு விடுவார்.
சாதனையை ஏற்றுக்கொண்டாலும் சரி, சாதனையை ஏற்றுக்கொள்ள இயலாத நிலை யில் இருந்தாலும் சரி, ஏன் ஏற்கவில்லை என்ற காரணத்தையும் உரியவருக்குத் தலைமைக் கழகம் அனுப்பும்.
தலைமைக் கழகம், உலக சாதனைகளின் பட்டியலைக் குறித்து வைத்துக் கொள்ளும் புதிதாக சாதனைகள் எழுந்தால் திருத்தம் செய்து, இல்லை யேல் உள்ளதை யெல்லாம் ஆண்டுக்கு ஒருமுறை ஒவ்வொரு நாட்டின் தேசியக் கழகங்களுக்கும் அனுப்பி வைக்கும்.
ஒவ்வொரு நாட்டின் தேசியக் கழகமும் தேசிய அளவில் நிகழ்கின்ற வெற்றிச் சாதனைக்காக, இதே முறைகளைத்தான் பின்பற்ற வேண்டும்.