பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா [] 79 200 மீட்டர் ஒட்டத்திற்கு மேல்

10000 மீட்டர் வரைக்கும் - 90 நிமிடங்கள்

10,000 மீட்டா பந்தயத்திற்கு மேல் - 3 மணி நேரம்

நேராக ஒடும் பாதையில் ஒடுவதாக இருந்தாலும் சரி, அல்லது வட்டம் சுற்றி வளைவுப் பகுதியில் ஒடுவதாக இருந்தாலும் சரி, ஒடுகின்ற ஒட்டக்காரர்கள், தாங்கள் கடக்க வேண்டிய முழு துரத்யுைம் கடக்கின்ற வகையிலே வாய்ப்புக்கள் உண்டு. ஒடி முடிக்கும் எல்லைக் கோட்டை அவர்கள் கடந்தால்தான் நிகழ்ச்சியை ஒடி முடித்ததாகக் கருதப்படுவார்கள் . தொடங்குகின்ற இடத்திலும், போட்டி ஒட்டம் முடிகின்ற இடத்திலும் 2 அங்குல அகலத்தில் சுண்ணாம்புக் கோடுகள் போடப்பட்டிருக்கும். முடி விடத்தில், அதே அகலக் கோட்டுடன் முடிவிடத்தைக் காட்டுவதுபோல, கோட்டிற்கு ஒடி அப்பால் (30 செ.மீ.) இரண்டு கம்பங்களை இரு பக்கங்களிலும் ஊன்றி வைத்திருப்பார்கள் . துப்பாக்கி ஒலியாலோ அல்லது விசில் ஒலியாலோ ஒட்டம் தொடங்கி வைக்கப்படும். 'உங்கள் இடங்களில் நில்லுங்கள்' (On your marks) என்று ஒட விடுபவர் கூறியவுடன், ஒடுவோர் அவரவர் இடங்களில் நிற்க வேண்டும் தயாரா (Ste) என்று அவர் ஆணைப் பிறக்கும்போது, எல்லோரும் கோட்டைத் தொடாமலும் கோட்டிற்கு அப்பால் காலையோ வைக்காமலும், அசையாமலும் (Still) இருந்து, ஒலி கேட்டவுடன் ஒட வேண்டும்.