பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 [T] விளையாட்டு விழா நடத்துவது எப்படி? முறை மாறியோ, விதி மாறியோ ஒலிக்கு முன்னே 'ஒடுவோர், மீண்டும் அழைக்கப்படுவார். பின் பற்றி ஒடுகின்ற அத்தனை பேருந்தான். 'தவறான தொடக்கம் (False start) என்று தவறு செய்தோர் எச்சரிக்கப்படுவார். இரண்டு முறை தவறியவர், அந்தப்போட்டியில் (Pentathlan or Decathlon) கலந்து கொள்வோர் மூன்று முறை தவறினாலும், குறிப் பிட்டப் போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பை இழப்பர்.

தவறாகத் தொடங்கி ஒடுவோரைக் கண்டவுடன் மற்ற ஒட்டக்காரர்களும் ஒடத் தொடங்குவது இயற்கையே. ஆகவே, ஒடத் தொடங்கிய எல்லோ ரையும் எச்சரிக்காமல், ஒடத் துவக்கிய ஆளையே தவறுக்கு வழிகாட்டியவர் என்று எச்சரிக்க வேண்டும். முடிந்தால் அதற்குரிய தண்டனையைக் கொடுத்துத் தண்டிக்கவும் வேண்டும்.

ஒவ்வொருவரும் தங்களுடைய 'ஒட உதவும் சாதனத்தை’ (Starting Block)பயன்படுத்திக் கொள்ளலாம் . ஆனால், சாதனத்திலே தொடர்பு கொண்டிருக் கின்ற இரண்டு கால்களும் தரையுடன் தொடர்பு கொண்டிருக்கவும் வேண்டும் என்பதை உணர வேண்டும்.

உடை.: ஒட்டக்காரர்கள் ஒட்டத்தில் பங்கு பெறும் போது அணிகின்ற உடையானது தூயதாகவும், போட்டிக்கென்றே தகுந்த முறையில் தயாரிக்கப்