பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 即 விளையாட்டு விழா நடத்துவது எப்படி? உபகரணங்களை கொண்டிருந்தாலும், அவை 0.5” கனத்திற்குமேல் அமைந்ததாகவும், காலணியில் அடித்தட்டிலுள்ள முன்பாகத்தைவிட குதிகால் பாகம் 0.25 அங்குலத்திற்கு மேல் கனமுள்ளதாகவும் இருக்கக் கூடாது . பந்தயக் காலணியில் (Spile) உள்ள ஆணிகளின் எண்ணிக்கை மொத்தம் 8. அவை முன் தட்டில் 6ம் பின் தட்டில் 2ம் என்ற எண்ணிக்கையுடன் இருப்ப துடன், 1 அங்குல உயரமும் 016 அங்குல அகலத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

காலணிக்கு உள்ளேயோ, வெளியேயோ வேறு எந்தவிதமான உதவி சாதனங்களையோ மற்றும் தூண்டும் சாதனங்களையோ பயன்படுத்தக்கூடாது . எண்: ஒவ்வொரு உடலாளரும், தனது பனியனில், மார்புக்கு முன்னால், முதுகுப்புறத்தில் என்று இரண்டு எண்களைத் தெளிவாகத் தெரியும் படி வைத்திருக்க வேண்டும்.

விளையாட்டுடையில் (Track Suit) பங்கு பெற வேண்டும் என்று விரும்புகின்ற உடலாளர், அந்த உடையில் தனக்குரிய எண்களைத் தைத்துக்கொண்டு இருக்க வேண்டும் . உயரத் தாண்டுதல், கோலூன்றித் தாண்டுதல் போன்றவற்றிற்கு மட்டும், ஒரு புறம் எண் இருந்தால் போதுமானது. ஆனால் எண்ணை அணியாத எவரும் போட்டியில் பங்கு பெற அனுமதிக்கப்பட மாட்டார் கள்.