எஸ். நவராஜ் செல்லையா [] 83
ஒடினால், ஒடியதாக வட்டக் குறிப்பாளர்கள் கூறினால், ஒட்டக்காரர்கள் வேண்டுமென்றே ஓடவில்லை என்றாலும், அதனால் அவர்கள் பயனடைந்தார்கள் என்று நடுவர்கள் கருதினால், அந்தப் போட்டியி லிருந்து அவரை விலக்கிவிட, நடுவருக்குப் பூரண அதிகாரமுண்டு என்பதை உடலாளர்கள் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.
தானாகவே தனது ஒடும் பாதையை விட்டு வெளியேறிய வீரர், மீண்டும் அந்தக் குறிப்பிட்ட ஒட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்.
தொடரோட்டப் போட்டிகளில் குறுந்தடியை (Baton) கைமாற்றிக் கொள்வதற்காக (Exchange) ஒடும் பாதைகளின் நடுவே, தங்களுக்குச் சாதகமாக, எந்தவிதக் குறியீடுகளையும் அமைத்துக் கொள்ளக் கூடாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இனி, களப்போட்டிகளில் கலந்து கொள்ளு கின்ற (Field Events) உடலாளர்கள் கவனிக்கவும்.
களப்போட்டியில் கலந்து கொள்ளுகின்ற உடலாளர்கள் தங்களுக்குரிய எறியும் வாய்ப்பை அல்லது தாண்டும் வாய்ப்பை ஒருமுறை இழந்து விட்டால் மீண்டும் அவர்கள் அந்த வாய்ப்பு முறையை (Turn) பெற முடியாது.
ஒருவேளை அவர்கள் ஒட்டப் பந்தயத்திலும் மற்றும் வேறு ஒரு களப் போட்டியிலும் ஒருசேரப் பங்குபெறும் நிலையிலிருந்தால், துணை நடுவர்கள்