பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எஸ். நவராஜ் செல்லையா

[] 85


அவர்களுக்குரிய வாய்ப்பைக் கொடுத்து, மற்றப் போட்டிகளுக்கும் அனுப்பி வைக்கலாம்.

ஆனால், எல்லா வாய்ப்பையும் எறிந்துவிட்டோ, தாண்டி விட்டோ போகிறோம் என்று அவர்கள் வற்புறுத்த முடியாது. வராமல் தவறிப் போன வாய்ப்பையும் திரும்பப் ப்ெற்றுக் கொள்ளமுடியாது. உடலாளர்கள் தங்களுக்குரிய வாய்ப்பைப் பெறுவதற்கும், ஒய்வு எடுத்துக் கொள்வதற்கும் ஒய்வு கால அளவு உண்டு.

உயரத்தாண்டுதல், நீளத்தாண்டுதல், மும் முறைத் தாண்டுதல, குண்டெறிதல், தட்டெறிதல், வேலெறிதல் முதலியவற்றிற்கு 2 நிமிட நேரமும்; கோலூன்றித் தாண்டலுக்கு 3 நிமிட நேரமும் ஒய்வு எடுத்துக் கொள்ளலாம் என்பதை உணர வேண்டும்.

தனக்குரிய எரியும் அல்லது தாண்டுதம் வாய்ப்பு எப்பொழுது, யாருக்கு அடுத்து வருகிறது என்பதை அறிந்திருந்தாலும் சரி, அல்லது நடுவர்கள் வாய்ப் பினைத் தர அழைத்தாலும் சரி, உடனே அவர்கள் எறியவோ தாண்டவோ வந்து பங்கு பெற வேண்டும். காரணமில்லாமல், பங்கு பெற வந்து வீணே நிற்பவர்களும் காரியமாற்றாமல் தாமதப்படுத்துகிறவர் களும் தங்களுக்குரிய வாய்ப்பை இழந்துவிடுகின்றார் கள். அவரது பெயருக்கு முன்னால், பதிவுப்பட்டியலில் "வாய்ப்பிழந்தோர் (fault) என்றவாறு குறிக்கப் பெறும்.

மீண்டும் அதேபோல், போட்டியில் கலந்து கொள்ளத் தாமதம் செய்தால், அவர்கள் அந்தக்