பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எஸ். நவராஜ் செல்லையா

[] 87


தவுபவர்கள் கூட, போட்டிக் களத்தை விட்டே வெளி யேற்றப்படுவார்கள்.

போதையுடன் இருக்கின்றார்களா என்பதைக் கண்டறியும் 'சோதனைக்குழு’ நியமிக்கப்பட்டு இருக்கிறது. போதையுடன் இருப்பதைக் கண்டு பிடித்தாலும் சரி, அல்லது சோதனைக்கு வரமறுக் கின்ற உடலாளர்களும் போட்டியிலிருந்தே விலக்கப் படுவார்கள். அப்புறப்படுத்தப்படுவார்கள்.

பெண்கள் போட்டிக்கான போட்டிகளில் பங்கு பெறும் வீராங்கனைகள், தலைமைக் கழகம் அங்கீகரிக்கும் டாக்டரிடமிருந்து, போட்டியில் பங்குபெற உடலளவில் உடல் திறன் பெற்றுள்ளார் எனும் ஆதாரச் சீட்டுடன் வரவேண்டும். சில நேரங்களில், டாக்டரின் சீட்டின்றி வருபவர்கள், மூவரடங்கிய டாக்டர் குழு ஒன்றால் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியை அறிந்த பிறகே பங்கு பெறும் வாய்ப்பினை வழங்கப் பெறுவார்கள்.

வெற்றி எண்: போட்டி நிகழ்ச்சிகளில் முதலாவ தாக வந்தவருக்கு வெற்றி எண் 5, இரண்டாவதாக வந்தவருக்கு 3, மூன்றாமவருக்கு 2, இறுதியில் வந்த நான்காமவருக்கு 1 என்று வெற்றி எண்களின் விதத்துடன் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழங்கப் படும்.

தொடரோட்டப் போட்டியில் பங்கு பெறுகின்ற குழுக்கள் இரண்டே இரண்டுதான் என்றால்,