பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



92

விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


போட்டியில், கடைசிவரை அவரவருக்குரிய பாதையில்தான் ஒட வேண்டும் என்ற விதிமுறை இருந்தால் அந்த நிலையை நிச்சயம் கண்காணிப்பது மிக முக்கியமான காரியமாகும்.

குறுந்தடியை மாற்றிக் கொள்கின்ற பரப்பளவு அவர் நிற்கும் கோட்டிலிருந்து முன்பாக 10 மீட்டர் துரமும், பின்புறமாக 10 மீட்டர் தூரமும் உண்டு, அதற்குள் தான் மாற்றிக் கொள்ள வேண்டும்.

'தான் எங்கே நின்று வாங்கினாலும் வசதியாக இருக்கும், என்று ஒர் உடலாளர் நினைத்தால், அந்த இடத்தில் தனது காலணியினால் தேய்த்து, சிறு அடையாளம் செய்து கொள்ளலாம். ஆனால், அதற்காக ஏதாவது ஒரு பொருளை வைத்து அடையாளம் என்று சொல்லக் கூடாது. அத்துடனும், ஒரு சிலர் பள்ளமே தோண்டி விடுவார்கள், அதை நடுவர் அனுமதிக்கக்கூடாது.

ஒட்டம் முடிவுபெறுகின்றவரை, குறுந் தடியை கையிலிருந்து நழுவவிடாமல் கொண்டுவர வேண்டும்.

தவறி, குறுந்தடி கீழே விழுந்துவிட்டால், பிறருடைய உதவியின்றி நழுவவிட்ட உடலாளரே எடுத்துக் கொண்டுதான் மீண்டும் ஒடிவர வேண்டும்.

முதல் கட்டப் போட்டியில் எந்த நான்கு பேர் கலந்து கொள்கின்றார்களோ, அவர்களே இறுதிப் போட்டிவரை கலந்துகொள்ள வேண்டும். இடையிலே யாருக்காவது காயம் பட்டாலொழிய.