பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா [] 93

 அவரால் பந்தயத்தில் கலந்துகொள்ள இயலாது என்று இருந்தாலொழிய வேறு யாரையும் மாற்றக் கூடாது.

ஆனால், ஒடுகின்ற வரிசை முறையில் அவர்களுக்குக்குள்ளாகவே மாற்றிக் கொள்ளலாம். அதே சமயத்தில் ஒருவரே இரண்டு முறை ஒடுவதற்கும் அனுமதியில்லை. ஒடவும் கூடாது.

இது, குழுவாகச் சேர்ந்து தொடராக ஒடுவதால்,ஒருவர் தவறு செய்தாலும், குழுவையே பாதிக்கும் என்பதால், தவறுக்குள்ளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து, கள நிகழ்ச்சிகளுக்குரியவற்றைக் காண்போம்.

கள நிகழ்ச்சிகளுக்கான பொறுப்பை ஏற்றி ருக்கும் தலைமை நடுவர் (Chief Referee). போட்டிகளுக்காகப் பயன்படுகின்ற எல்லா உதவி சாதனங்களும் விதிகளுக்கேற்ற முறையில், தகுதியுடையனவாக இருக்கின்றனவா என்பதையும், வேண்டிய தளவாடங்கள் எவையாவது விடுபட்டிருக்கின்றனவா என்பதையும் முன் கூட்டியே பரிசோதித்துத் தேர்வு செய்து, தேர்ந்தவற்றையே போட்டி நிகழ்ச்சிகளுக்குத் தர வேண்டும். அவரின் கீழ் உதவியாளராகப் பணியாற்ற இருக்கின்ற அனைவரும், கள நிகழ்ச்சிகளை நடத்துவதற்காகத் தொடங்குவதற்கு முன்னர். கள நிகழ்ச்சியினால், ஒட்டப் பந்தய நிகழ்ச்சிகள் நடத்த ஏதாவது