பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?

 இடையூறு வருமா என்பதையும் ஆராய்ந்தே தொடங்க வேண்டும்.

அவ்வாறு இருக்குமானால், கள நிகழ்ச்சிகள் என்றும் மெதுவாகத்தான் முடியும் என்பதனால், கள நிகழ்ச்சிகளுக்கும் இடையூறில்லாமல், விரைவாக முடிந்து விடுகின்ற ஒட்ட நிகழ்ச்சிகளும் தேங்கி நின்று பாதிக்கப்படாமல், பார்த்து நடத்தி விட வேண்டும்.

கள நிகழ்ச்சிகளின் தூரத்தையும், உயரத்தையும் அளக்கும்போது துணியினாலான அளவை நாடாவைப் பயன்படுத்தாமல், தகட்டாலான அளவை நாடாவையே (Steel tape) உபயோகிக்க வேண்டும்.

எறிகின்ற போட்டியில், எறிகின்ற ஒவ்வொரு போட்டியாளரான உடலாளரின் எறி முயற்சியையும், (தவறு இல்லாமல் இருந்தால் தாண்டும் முயற்சியையும் அளந்து குறித்துக் கொள்வது மிக மிக அவசியம். ஒரு முறை அதிகாரிகள் எடுக்கின்ற முடிவே இறுதியானது என்பதால், முடிவெடுப்பதற்கு முன்னரே நிதானமாகவும், உறுதியாகவும், தெளிவாகவும், எச்சரிக்கையாகவும் எடுக்க வேண்டும்.

கள நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்ற எறி பரப்பு அல்லது தாண்டும் பகுதிகள், நிகழ்ச்சியை நடத்துகின்ற அளவுக்கு நல்ல நிலைமையில் இல்லை என்று (அதிகாரிகள்) துணை நடுவர்கள் கருதினால், அவசியமானால், இடத்தை மாற்றி அந்த நிகழ்ச்சியை