பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

95


வசதியான பரப்பளவில் நடத்துவதற்கு நடுவருக்கு அதிகாரம் உண்டு.

ஆனால், ஒரு முறை ஒருவருக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தால், இடையிலே நிறுத்தாமல் எல்லோருக்கும் ஒவ்வொரு வாய்ப்புக் கொடுத்தவுடன்தான், வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதை நினைத்து செயல்பட வேண்டும்.

உடலாளர்களைத் தாண்டுவதற்காகவோ அல்லது எறிவதற்காகவோ எண்ணையோ அல்லது பெயரையோ இட்டு அழைக்கும்போது, பெயர்ப் பட்டியலில் பதிவாகியுள்ள வரிசையின்படியே தான் அழைக்க வேண்டும். நடுவர் தனது விருப்பம் போல் அழைக்கத் தொடங்கினால், குழப்பமே முடிவாகத் தோன்றும்.

அதே சமயத்தில், இன்னொரு போட்டி நிகழ்ச்சிக்குப் போக வேண்டிய அவசியமும் கட்டாயமும் ஒர் உடலாளருக்கு இருந்தால், முன்னாலே அவருக்குத் தேவையான வாய்ப்பினைக் கொடுத்து அனுப்பலாம். அல்லது, மற்ற நிகழ்ச்சியை முடித்து வந்த பிறகு அவருக்குரிய வாய்ப்பினை வழங்கலாம். கால நேரம் பார்த்து இந்த நிலையை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

உயரத் தாண்டும் நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படும் குறுக்குக் குச்சிகளும், அவைகளைத் தாங்கப் பயன்படும் ஆணிகளும் எல்லாம் ஒரே அளவு கனம், சுற்றளவு உள்ளனவாக இருத்தல் அவசியம் என்பதை