பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


உணர்ந்து, அதற்கேற்ப உள்ளனவா என்பதை கண்காணிக்க வேண்டும்.

ஆணின் நீள அங்குலத்திற்கு மேற்படாதவாறும், மரத்தாலான குறுக்குக் குச்சியின் நீளம், கம்பங்களைத் தாண்டி 6 அங்குலத்திற்கு மேல் தாண்டிப் போகாதவாறும் அமைந்திருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

களநிகழ்ச்சிகளை எறியும் நிகழ்ச்சிகள், தாண்டும் நிகழ்ச்சிகள் என்று இரு வகையாகப் பிரிக்கலாம். முதலில் தாண்டும் நிகழ்ச்சிகளை எவ்வாறு நடத்தி முடிப்பது என்று காண்போம்.

1. உயரத் தாண்டல் (High Jump)

உயரத் தாண்டலுக்கு ஓடிவரும் பாதை 50 அடியிலிருந்து 57’3” நீளமாவது இருக்க வேண்டும்.

உயரத் தாண்டலுக்காக ஓடிவரும் உடலாளர், தாண்டும் பொழுது ஒரு காலால் தான் (தரையை) உதைத்தெழும்ப வேண்டும்.

குறுக்குக் குச்சியைத் தாண்டிக் கடக்கும் பொழுது, குறுக்குக் குச்சியைத் தட்டி விட்டுக் கீழே விழ வைத்தாலும் அது குறுக்குக் குச்சியைக் கடந்து தாண்டிக் கீழே குதித்து காலூன்றிய பிறகும், குறுக்குக் குச்சி கீழே விழுந்தாலும், தாண்டிய உடலாளர் தாண்டவில்லை என்றே கருதப்படுவர்.

உயரத்தாண்டுகின்ற உடலாளர், தேவையானால், ஓடிவரும் பாதையிலோ அல்லது உதைத்தெழும்பும்