பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா

97


இடத்திலோ (Take off) அல்லது உயரத்தைக் காட்டுகின்ற குறுக்குக் குச்சியின் மேலோ அடையாளம் தேவையென்று கருதினால், அதற்காக ஒரு சிறு கைகுட்டையோ அல்லது அதுபோன்ற ஏதேனும் ஒரு சிறு துண்டையோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், அவ்வாறு வைக்கின்ற அடையாளம் குறிக்கும் பொருள்களை, விழாக் குழுவினர்தான் தந்திருக்க வேண்டும்.

அதே சமயத்தில், தாண்டிக் குதிக்கும் மணற் பரப்புப் பகுதியில் எந்தவித அடையாளத்தையும் (Mark) வைத்துக் கொள்ள அனுமதிக்கக்கூடாது. மீறிச் செய்வது மாபெரும் தவறாகும்.

உயரத் தாண்டும் போட்டிகளில், ஒவ்வொரு முறை குறுக்குக் குச்சி உயர்த்தப்படும் பொழுதெல்லாம் எத்தனை அங்குலம் உயர்த்தப்படுகிறது என்பதையும், எத்தனை அடி உயரம் தற்பொழுது இருக்கிறது என்பதையும் உடலாளர்களுக்கு நடுவர்கள் அவ்வப்போது அறிவித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

தான் விரும்பும் எந்த உயரத்தில் இருந்தாவது, ஒரு உடலாளர் தன் விருப்பப்படித் தாண்டத் தொடங்கலாம் தொடர்ந்து மூன்று முறை ஒரு உயரத்தைத் தாண்டத் தவறினால், அவரை போட்டியினின்றும் வெளியேற்றி விடலாம். அவர் பெயருக்கு முன்னே ஒரு நீண்ட கோட்டைக் கிழித்து அவரை