பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

விளையாட்டு விழா நடத்துவது எப்படி?



நீக்கிவிட வேண்டும். தாண்டிய உயரத்தின் குறிப்பு மட்டும் அப்படியே இருக்க வேண்டும்.

உதாரணமாக, ஒரு உயரத்தைத் தாண்ட ஒருவர் முயற்சி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இரண்டு முறை எடுத்துக் கொண்ட முயற்சியில் அவர் தோற்றுவிடுகிறார். மூன்றாவது முறையும் தோற்றால் அவர் நிச்சயம் வெளியேற்றப்படுவார். ஆனால் அவரோ தான் அடுத்த உயரத்தில் குறுக்குக் குச்சியை ஏற்றி வைக்கும்பொழுது, தாண்டுகிறேன் என்ற கூறினால், அவருக்குத் தாண்டக்கூடிய வாய்ப்பை அளிக்கலாம்.

ஆனால், அவர் அந்த ஏற்றப்பட்ட உயரத்தை முதல் முயற்சியிலேயே தாண்டி விட வேண்டும். அவ்வாறு தாண்டிவிட்டால், அவர் மேலே தொடர்ந்து தாண்ட அனுமதிக்கப்படுவார். இல்லையென்றால், அவரைப் போட்டியினின்றும் நீக்கிவிடலாம். ஏனென்றால் அவர் மூன்று முறை தொடர்ந்தாற்போல் தாண்டஇயலாமல் தவறி விட்டார் அல்லவா!

தொடர்ந்தாற்போல் உயரமாகத் தாண்டிக் கொண்டே போகின்ற உடலாளர், மற்றவர்கள் எல்லாராலும் முடியாத உயர அளவைத் தாண்டிவிட்டு, மறுமுறை ஏற்றிய உயரத்தைத் தாண்ட இயலாது போனால், முன்னால் தாண்டிய உயரமே அவரது வெற்றிச் சாதனையாகும்.

இரண்டு கால்களால் தரையை உதைத் தெழும்பிக் குதித்துக் குறுக்குக் குச்சியை கடப்பதோ