பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். நவராஜ் செல்லையா

99


(Dive), அதாவது நீச்சல் குளத்தில் மேலேயிருந்து தாவிக்குதிப்பது போல முக்குளிப்பதோ, அல்லது குட்டிக் கரணம் போடுவதுபோல் தாண்டிக் குதிப்பதோ, அனைத்தும் தவறானத் தாண்டும் முறையாகும்.

இந்த முறைகளில் ஒருவர் எவ்வளவு தாண்டினாலும் அது ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது. அதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட வேண்டும்.

உயரத்தைத் தாண்டுகின்ற முறையில், குறுக்குக் குச்சியின் மேலே முதலில் கடக்க வேண்டியது கால்களே, கால் உயர்ந்த பிறகுதான் மற்ற பாகங்களும் தலையும் மேலே எழும்ப வேண்டும். குறுக்குக் குச்சியைத் தலை முதலில் கடந்தால் அது தவறாகும். ஆகவே, உதைத்தெழும்பிய ஒருகாலோடு, மற்றொரு கால்தான் மேலேறும் என்பதையும், அவ்வாறுதான் அவர் முறையோடுதாண்டுகிறாரா என்பதையும் நடுவர் நன்றாகக் கவனிக்க வேண்டும்.

ஓடிவருகின்ற உடலாளர் தாண்ட முயற்சி எடுத்து, குறுக்குக் குச்சியின் கீழே ஓடி விட்டாலும் சரி, அல்லது குறுக்குக் குச்சியைக் கீழே கையால் தட்டி விட்டாலும் சரி, அது அவர் எடுத்துக்கொண்ட 'ஒரு' முயற்சி (oneTrial) என்றே பதிவேட்டில் அறிவிக்கப்பட வேண்டும்.

எல்லா உடலாளர்களும் தாண்ட இயலாமல் வெளியேறிய பிறகு, இறுதியில் இருக்கும் ஒர் உடலாளர், தான் தாண்ட விரும்பும்வரை, இயலும்வரை