பக்கம்:விளையும் பயிர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தை காந்தி

அவர்கள் இந்தியாவையே ஆளுகிறார்கள். இந்த ஊரில் யார்தாம் மாமிசம் சாப்பிடவில்லை? நீ என்னவோ பெரிய மனிதர்களெல் லாம் சுத்த வைஷ்ணவர்கள் என்று நினைத்துக்கொண் டிருக்கிறாய்! எனக்குத் தெரியும், தம்பி, அவர்கள் ரகசியமெல்லாம். சாராய மும் மாமிசமும் அருந்தாத பெரிய மனுஷர் ஒருவரைக் காட்டு, பார்க்கலாம். நான் காதை அறுத்துக் கொள்கிறேன். எல்லோரும் மறைவாகச் செய்கிறார்கள். நாமும் அப்படிச் செய்யலாமே!’ என்று காந்திக்கு அவன் உபதேசம் செய்தான். காந்தி மாமிச வாசனையே காணாத குடும்பத்தில் பிறந்தவர். ஆதலால் அவருக்கு மாமிசம் என்றாலே இயற்கையாக ஓர் அருவருப்பு இருந்தது. ஆனால் அந்தத் தோழன் படிப்படியாக உருவேற்றி வந்தான். காந்தி அவன் பேச்சில் மயங்கினார். -

ஒரு நாள் வெகுதூரமான தனி இடத்துக்கு அவரைத் தோழன் அழைத்துச் சென்றான். மாமிச உணவை முதல் முதலாக அன்று காந்தி புசித்தார். அதை அவர் உண்பதற்குள் போதும் போதுமென் றாகிவிட்டது; அவ்வளவு அருவருப்பு! வாந்தி யெடுக்க வந்தது. அன்று இரவு முழுதும் அவருக்குத் தூக்கமே இல்லை. அவர் வயிற்றுக்குள்ளே இருந்து ஆடு ஒன்று, அம்மே, அம்மே” என்று கத்துவதுபோல இருந்தது.

சில நாட்கள் இந்தக் கெட்ட பழக்கம் காந்தியிடம் இருந்தது. அவர் புலால் உண்பது தாய் தகப்பனாருக்குத் தெரியாது. வெளிப்படையாகத் தின்னத் தைரியம் இல்லை. சில சமயங்களில், பொய் வேறு சொல்லவேண்டி வந்தது. சிரவணனுடைய கதையும் அரிச்சந்திரனுடைய கதையும் அவர் மனசில் பதிந்திருந்தன அல்லவா? தாய் தகப்பனாருக்குத் தெரியாமல் ஒரு காரியத்தைச் செய்வதும், அதற்காகச் சில பொய் சொல்வதும் அவருக்குப் பிடிக்க வில்லை. மிகவும் வேதனை அடைந்தார். ஆகவே மாமிசம் உண்பதை விட்டுவிட்டார்.

காந்தியின் சொந்தக்காரர் ஒருவர் அவருக்குச் சிகரெட் குடிக் கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுத்தார். சிகரெட் வாங்கப் பணம் வேண்டுமே சிகரெட்டுக்காகவென்று அப்பாவிடம் சொல்லிப் பணம் வாங்க முடியுமா? ஆகையால் திருட ஆரம்பித்தார். வீட்டு வேலைக்காரர்கள் பணத்தைத் திருடிச் சிகரெட் வாங்கிக் குடித்தார். அவருக்கு அவருடைய தமையனே கூட்டாளி. தமையனார் கையில்

ll