பக்கம்:விளையும் பயிர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையும் பயிர்

தங்கக் காப்புப் போட்டிருந்தார். அதில் சிறிது வெட்டி விற்று, அந்தப் பணத்துக்குச் சிகரெட் வாங்கிப் பிடித்தார்கள்; பழைய கடனையும் தீர்த்தார்கள். காந்தியின் மனசு அதைப் பொறுக்க வில்லை. நமக்கு வேண்டியதை யெல்லாம் வாங்கித் தந்து நம்மைக் காப்பாற்றுகிறார் அப்பா. அவருக்கு வஞ்சகம் செய்து, இந்தக் காப்பை வெட்டினோமே! என்ன கொடுமை!” என்று வருந்தினார். இதை அப்பாவிடம் சொல்லி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று தீர்மானித்தார். எப்படிச் சொல்வது? நேரிலே சொல்லத் தைரியம் வரவில்லை. ஒரு கடிதத்தில் தாம் செய்த பிழையை எழுதி, என்ன தண்டனை செய்தாலும் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட் டிருந்தார். "இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்" என்று உறுதியும் கூறியிருந்தார்.

அப்பா அப்போது நோய்வாய்ப் பட்டிருந்தார். படுக்கையில் படுத்தபடி இருந்தார். காந்தி கடிதத்தைக் கட்டிலின்மேல் வைத்து விட்டுக் கீழே உட்கார்ந்துகொண்டார். அப்பா என்ன செய் தாலும் சரி; ஏற்றுக்கொள்வதுதான் நம்பாவத்துக்குப் பரிகாரம்' என்ற நினைப்போடு உட்கார்ந்திருந்தார். தந்தை எழுந்து உட்கார்ந்து கடிதத்தை எடுத்துப் படித்தார். அவர் முகம் சிவக்கவில்லை. கண்களில் தீப்பொறி பறக்கவில்லை. தலையில் அடித்துக்கொள்ளவில்லை. இரையவில்லை. ஆனால் அவர் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் ஒழுகியது. அவர் உள்ளம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்க வேண்டும் என்பதைக் காந்தி சிந்தித்துப் பார்த்தார். அவருக்கு அழுகை வந்துவிட்டது. தந்தை கடிதத்தைக் கிழித்தெறிந்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டார். ஒரு வார்த்தையும் பேசவில்லை. பேசாவிட்டாலும் அவர் கண்ணீர் காந்தியின் உள்ளத்தைச் சுட்டது; அவருடைய அழுக்கை அலம்பியது. அதுமுதல் திருட்டு, புகைபிடிப்பது முதலிய கெட்ட பழக்கங்கள் அவரிடமிருந்து ஓடியே போய்விட்டன.

காந்தி மெட்ரிகுலேஷனில் தேர்ச்சி பெ ற்றார். பிறகு பாவ நகரில் உள்ள காலேஜில் ஒரு வருஷம் படித்தார். அப்பால் சீமைக்குப் போய்ப் படித்தால் அவர் முன்னுக்கு வருவார் என்று வேண்டியவர்கள் சொன்னார்கள். காந்திக்கும் அது விருப்பமாகவே இருந்தது. அவருடைய தகப்பனார் அப்போது இறந்துவிட்டார். காந்தி சீமைக்குப் போவது அவர் தாய்க்குப் பிடிக்கவில்லை. அங்கே,