பக்கம்:விளையும் பயிர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தை ரவி

பேசிக்கொண்டார்கள். ரவியின் காதில் அது விழுந்தது. அந்த அற்புத சக்தியை அடைய அவர் நிச்சயித் தார். சிங்கத்தைப் பிடித்துக்கொண்டார். மரச் சிங்கந்தான்; 'பொம்மைச் சிங்கம். ஆனாலும் அவர் மனசுக்குள்ளே நினைத் தால் நிஜச் சிங்கம் ஆகிவிடுமே. அதை மரக் கத்தியினால் லொட்டு லொட்டு என்று அடிப்பார். கத்தியிலே கூர்மை ஏது? ஆகையால் லொட்டு லொட்டு என்றுதான் சத்தம் கேட்கும். பலிகொடுத் தால் மந்திரம் சொல்ல வேண்டாமா? அவரே அந்த மந்திரத்தைப் புதிதாகக் கட்டினார்.

உல்குட் டுல்குட் ட்யாம் குங்குட் ஆக்ரோட் பாக்ரோட் கட் கட் கடாஸ் பட் பட் படாஸ்

இதுதான் அவர் கட்டின மந்திரம். இதற்கு என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியாது. ரவிக்குக்கூடத் தெரியாது.

ரவீந்திரர் வீடு மிகவும் பெரியதென்று முன்பே சொன்னேன். அந்த வீட்டில் சில சமயங்களில் ராத்திரியில் நாடகம் நடை பெறும். நாடகக்காரர்கள் வந்து திரை கட்டி நாடகம் ஆடுவார்கள். ராத்திரி நெடுநேரம் நாடகம் நடக்கும். பெரியவர்களெல்லாம் போய்ப் பார்ப்பார்கள். அப்போது நடுநடுவே ரூபாயை மேடை மேல் எறிவார்கள். அவர்களுக்கு நாடகத்தினால் ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அது அடையாளம். நடிகர்கள் அதை எடுத்துக் கொள்வார்கள்.

ஒரு நாள் குழந்தை ரவியும் நாடகத்துக்குப் போயிருந்தார். அவர் கையிலே ரூபாய்களைக் கொடுத்து நடுநடுவே ஒவ்வொரு ரூபாயாகப் போடச் சொன்னார்கள். ரவிக்கு மிகவும் சந்தோஷ மாக இருந்தது. ரூபாயைக் கொஞ்ச நாழிகைக்கு ஒரு தரம் போட் டுக்கொண்டே வந்தார். குழந்தைதானே? எவ்வளவு நேரம் விழித்துக்கொண்டே இருப்பார்? கண் இமைகளைத் தூக்கம்

27.