பக்கம்:விளையும் பயிர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையும் பயிர்

இழுத்தது தூங்கி விழுந்தார். அதைப் பார்த்து அவரை அப் படியே தூக்கிக்கொண்டு போய்ப் படுக்கையிலே விட்டு விட் டார்கள். மறுநாள் எழுந்து பார்த்தால் அவர் படுக்கையிலே இருக்கிறார், "நான் இங்கே எப்படி வந்தேன்? நாடகமல்லவா பார்த்தேன்? ரூபாயைப் போட்டேனே! எல்லா ரூபாயையும் போடவில்லையே' என்று அம்மாவிடம் கேட்டார். நீ நாடகம் பார்த்த அழகு போதும்! நீதான் தலையை அசைத்து அசைத்துத் தூங்கி விழுந்தாயே! உன்னைத் தூக்கிக்கொண்டு வந்து படுக்கை யில் விட்டேன்' என்றாள் அம்மா. அத்தனை பேரும் பார்க்கவா?” என்று ரவி கேட்டார். அம்மா, "ஆம்" என்றாள். ரவிக்கு ஒரே வெட்கமாகப் போய்விட்டது. என்னைத் தூங்குமூஞ்சி என்று அத்தனை பேரும் தெரிந்துகொண்டார்களே!” என்று வருத்தப் பட்டு முகத்தைக் கவிழ்த்துக்கொண்டார்.

ரவிக்குப் பல அண்ணன்மார், பல மன்னிகள். ஒரு மன்னி சீன தேசத்துக் கரிக்குருவி ஒன்றை வளர்த்து வந்தாள். உல்லாச மாகப் பறந்து விளையாடுகிற பறவையைக் கூட்டில் அடைத்தது ரவிக்குப் பிடிக்கவில்லை. அது சத்தம் போட்டால் அவருக்கு வேதனையாக இருக்கும்; வயிற்றை என்னவோ பண்ணும்.

மன்னிக்கு அணில்பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்கு ஏற்பாடு செய்துகொண் டிருந்தாள். ரவி அவளிடம் போய், மன்னி, மன்னி, நீ தப்புக்காரியம் செய்கிறாய்” என்றார், என்ன தப்பு?" என்று கேட்டாள். குழந்தையைப் போல ஆனந்தமாக விளையாடும் அணில்களைப் பார். அது கட்டுக் காவல் இல்லாமல் விளையாடுவது எவ்வளவு அழகாக இருக் கிறது! அதைப் பிடித்து வந்து சிறையில் அடைப்பதுபோல அடைக் கலாமா? அடைத்தால் அது சந்தோஷமாக இருக்குமா?" என்றார். மன்னிக்கு இதெல்லாம் காதில் விழவில்லை. 'போடா பைத்தியக் காரா மகா பெரியவன் போலப் பேச வந்துவிட்டான்' என்று சொல்லிவிட்டாள். இரண்டு அணில்களைப் பிடித்து வந்து மன்னி வளர்க்க ஆரம் பித்தாள். ரவீந்திரருக்கு மனசு மிகவும் கஷ்டப்பட்டது. அவரையே ஜெயிலில் பிடித்துப்போட்டால் எப்படி இருக்குமோ, அப்படி அவர் சங்கடப்பட்டார். ஆகையால் அவர் சமயம் பார்த்து ஒருவருக்கும் தெரியாமல் அந்த அணில்களை எடுத்து வெளியிலே விட்டார். என்ன வந்தாலும் வரட்டும் என்ற துணிவோடேதான்

357