பக்கம்:விளையும் பயிர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜேன் பாபு

"என் கண்ணோ இல்லையோ! காகா ஓஷ் !இதோ மைனா பார்! மைனாவுக்கு ஒரு பிடி ;குயிலுக்கு ஒரு பிடி" என்று கொஞ்சிக் கொ ண் டே ஊட்டு வாள். காலையிலே எழுந் திருத்தால், சித்தி மைனா வையும் குயிலையும் ராத் திரி கூப்பிட்டாள் போல் இருக்கிறதே' என்று தோன்றும்.

அ ஸ் த மி த் த வுடனே தூங்கிவிடும் பழக்கம் ராஜேன்பாபு வை நெடுநாள் விடவே யில்லை.அவர்மேல்படிப் புப் படிக்கிறபோது கூட ஏழரை மணிக்கே தூங்கிவிடுவார். இந்த வே டி க் கை யை க் கேளுங்கள். அவருக்கு முப்பது வயசு கடந்து கொண் டிருந்தது. சட் டக் காலேஜில் அவர் பு ர ப ஸ ர் வே லை பார் த் து வந்தார். அதோடு வக்கீலாகவும் உத்தியோகம் பார்த் தார். காலை நேரத்தில் வழக்குக் கட்டுகளைப் படிப்பார். கோர்ட்டுக் குப் போவார். மத்தி யான்னத்துக்குமேல் சட்டக்காலேஜூ-க்குப் போய்ப் பாடம் சொல் லுவார். சட்டப்பரீட்சையில் உயர்ந்தது எம்.எல் பரீட்சை.அதிலும் தேறிப்பட்டம் பெறவேண்டும் என்று ராஜேன் பாபு எண்ணினார். இத்தனை வேலைகளையும் வைத்துக்கொண்டு எப்படிப் படிக்கிறது?

31