பக்கம்:விளையும் பயிர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ராஜேன் பாபு

விழுந்துவிட்டார். கழுகு பறந்தோடிப் போயிற்று. துப்பாக்கி ரவை வெடித்ததால் பயந்து போய் மெளல்வி கீழே விழுந்து விட்டார். இதைப் பார்த்து ராஜேன் பாபுவும் சிற்றப்பாவும் இடிஇடியென்று சிரித்தார்கள்.

ராஜேன் பாபுவினிடம் அம்மாவுக்கு அதிகப் பிரியம். பஜனைப் பாட்டுகளும் ராமாயணம் முதலிய கதைகளும் அம்மா சொல்வாள். அவற்றைக் கவனமாகக் கேட்டுத் தெரிந்துகொள்வார்.

ராஜேன் பாபு பிகார் மாகாணக்காரர். அவர் கல்கத்தாவில் காலேஜ் படிப்புப் படித்தார். வங்காளிகள் படிப்பில் கெட்டிக்காரர்கள் என்றும், பிகாரிகளுக்கு அவ்வளவு புத்திக் கூர்மை இல்லையென்றும் காலேஜில் பேசிக்கொள்வார்கள். ராஜேன் பாபு முதல்முதலில் காலேஜில் வந்து சேரும்போது அங்கே ஆசிரியராக இருந்த ரசிக பாபு என்பவரைப் பார்த்தார். அந்த ஆசிரியர்,"என்ன பையா, பிகாரி வங்காளிப் பையன்களுக்குச் சமானமாகப் படிக்க முடியுமா? படித்துப் பேர் வாங்கவேண்டும்” என்று சொன்னார்.

ராஜேன் பாபுவினுடைய மனத்தில் அவர் சொன்னது நன்றாகப் பதிந்துவிட்டது. காலேஜில் நடந்த எல்லாப் பரீட்சைகளிலும் அவரே முதல் மார்க்கு வாங்கினார். அதனால் அவருக்குப் பல பரிசுகளும் உபகாரச் சம்பளங்களும் கிடைத்தன.

எப்.ஏ. வகுப்பில் ராஜேன் பாபு படித்துக்கொண்டிருந்தார். ஒரு வெள்ளைக்காரர் புதிய பிரின்சிபாலாக வந்தார். எப்.ஏ. பரீட்சைக்கு மாணாக்கர்களை அனுப்புவதற்கு முன், 'ஸெலக்ஷன்' பரீட்சை நடந்தது. ஒரு நாள் புதிய பிரின்ஸிபால் 'இன்னார் இன்னார் பரீட்சைக்குப் போகலாம்' என்று தெரிவிக்க வந்தார். பையன்கள் ஆவலோடு அவர் படிக்கும் பேர்களைக் கேட்டார்கள். ஸெலக்ஷன் ஆனவர்களின் பெயர்களை ஒவ்வொன்றாகப் படித்தார் பிரின்ஸிபால். ராஜேன் பாபு கடைசிவரையில் கவனித்தார். அவர் பெயர் வரவில்லை. ராஜேன் பாபு ஸெலக்ஷன் பரீட்சையில் நன்றாக எழுதியிருந்தார். அவர் பெயர் வராமல் இருப்பதாவது? அவர் எழுந்து நின்றார். "ஸார், என் பெயரை வாசிக்கவில்லையே!” என்றார். பிரின்ஸிபால் ஏளனச் சிரிப்போடு, ஸெலக்ஷனில் தேறினவர்களின் பெயர்களே இதில் இருக்கும்” என்றார். ராஜேன் பாபுவுக்கு ரோசம் தாங்கவில்லை. மற்றப் பையன்கள்கூட ஆச்சரி


33