பக்கம்:விளையும் பயிர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார்

கவிச் சக்கரவர்த்தி சி. சுப்பிரமணிய பாரதியார் என்று விளக்க மாகச் சொல்லவேண்டியதில்லை .பாரதியார் என்றாலே எனக் கும் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கவிச்சக்கரவர்த்தி சி. சுப்பிர மணிய பாரதியாருடைய ஞாபகந்தான் உண்டாகும். சுப்ரமணியன் என்பது தகப்பனார் வைத்த பெயர்.பாரதி என்பது அவருடைய பெரு மையை அறிந்தவர்கள் வைத்த பெயர்.பாரதி என்பதற்குக்கலைமகள் என்று அர்த்தம். கலைமகளே அவதாரம் செய்தது போன்ற கலைக் களஞ்சியமாக இருக்கிறவர்களுக்குப் பாரதி என்ற பட்டப் பெயர் கொடுப்பார்கள்.நம்முடைய பாரதியாருக்கு முன்பு பல பாரதிகள் கோபாலகிருஷ்ண பாரதி, அனந்த பாரதி என்பவர்களைப் போலப் பலர் இருந்திருக்கிறார்கள்;அவருக்குப் பின்பும் பல பாரதிகள் உண்டு. ஆனால் பாரதியார் என்று சொன்னமாத்திரத்திலே நமக்கெல்லாம் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்ற பாட்டைப் பாடின நம்முடைய சுப்பிரமணிய பாரதியாரைத்தான் நினைக்கத் தோன்றுகிறது. காரணம் என்ன? அவர் இத்தனை பாரதிகளி லெல்லாம் பெரியவர் வயசினால் அல்ல கவிப் புலமையினால்.

இந்தியா இப்போது சுதந் தரம் அ டைந் து வி ட் ட து. இதற்கு முன் அடிமை வாழ்வில் நாம் இருந்தோம். அப்போது நமக்கு இருந்த சுதந்தரப் பசியை அவர் பாட்டாகப் பாடினார். பாரத தேசத்தில் அவரைப் போல மனத்தை உருக்கும்படி சுதந்தரப் பசியைப் பற்றிப் பாடினவர்கள் இ ல் லை. அது மட்டுமா? சுப்பிரமணிய பாரதி யார் நமக்குச் சுதந்தரம் கிடைப் பதற்கு முன்பே இறந்துவிட் டார். ஆனால் சுதந்தரம் வந்த பிறகு பாடுவதற்குக்கூட அவர்