பக்கம்:விளையும் பயிர்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

காலத்தில் இப்படி விளங்கியது என்று சொல்வது வாழ்க்கை வரலாறு பிற்காலத்தில் புகழ்பெற்று வாழ்ந்த பெரியவர்களின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளே அவர்களுடைய வரலாறுகளிலிருந்து அறிகிறோம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற பழமொழியை உண்மைப் படுத்தும் நிகழ்ச்சிகளைப் பெரும்பாலும் அந்த வரலாறுகளிலேக் காணலாம்.

சில பெரியவர்களின் இளமைப் பருவ நிகழ்ச்சிகளை விரித்து எழுதினால் குழந்தைகள் படித்து இன்புறுவார்கள் என்ற எண்ணத்தோடு மகாத்மா காந்தியடிகள் முதலிய ஏழு பேர்களின் வரலாற்றி லிருந்து அவற்றைத் தொகுத் தேன். ஒவ்வொரு பெரியவரைப்பற்றியும் ஒவ்வொரு கட்டுரையாகக் 'கண்ண'னில் எழுதி வந்தேன். குழந்தை களுக்குச் சுவையூட்டும் வகையில் தெளிவான சின்னஞ் சிறு வாக்கியங்களில் எழுதவேண்டும் என்பது என் விருப்பம். ஒருவாறு அந்த விருப்பத்தை நிறைவேற்ற முயன்றேன். அப்படி எழுதியவற்றின் தொகுப்பே இந்தப் புத்தகம். 'கண்ண'னில் வரும்போது குறிப்பிட்ட அளவுக்குள் அடங்கவேண்டி யிருந்தமையால், கிடைக்கும் செய்திகளை யெல்லாம் பயன்படுத்திக்கொண்டு விரிவாக எழுத முடிய வில்லை. அப்படி எழுதினால் ஒவ்வொருவரையும் பற்றி ஒவ்வொரு புத்தகமே எழுதிவிடலாம்.

நாளைக்குப் பெரியவர்களாகும்போது, இதைப் படிக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் நாடு புகழ வாழும். பெரியவர்கள் ஆகிறார்களோ அவர்கள் தங்கள் இளம் பருவ அநுபவங்களை நினைக்கும்போது, இந்தப் புத்தகக் தைப் படித்த நினைவும் வரலாம் அல்லவா? வரும் என்று. . மகிழ்ச்சி அடைகிறேன். பெரியவர்களாகிய நீங்கள்

"அப்படியே ஆகுக!" என்று வாழ்த்துங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விளையும்_பயிர்.pdf/4&oldid=1411997" இலிருந்து மீள்விக்கப்பட்டது