பக்கம்:விளையும் பயிர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெளலான ஆஸாத்

மகாத்மா காந்தி எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக இருந்தார். எல்லா ஜனங்களிடத்திலும் அன்பாக இருந்தார். ஆனா லும் அவருக்குச் சில பேரிடத்தில் அதிக அன்பும் மதிப்பும் உண் டாயின. அவர்களோடு அதிகமாகப் பழகினார். அப்படிப்பட்டவர் கள் சில பேராவது உங்களுக்குத் தெரியும். உங்களைக் கேட்டால் உடனே ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி என்று வரிசையாகச் சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள். அந்த வரிசையில் நிச்சயமாக மெளலான அபுல் கலாம் ஆஸாத்தும் ஒருவராக இருப்பார். இப்போது அவர் பாரத நாட்டின் கல்வி மந்திரியாக இருப்பது உங்களுக்குத் தெரியுமே! கல்வி கற்கும் இளம் பருவத்தில் உள்ள நீங்கள் கல்வி மந்திரியைக் குறித்து அதிகமாகத் தெரிந்துகொள் வது நல்லதுதானே?

இப்போது மெளலான ஆஸாதைப் பார்த்தால் மிகவும் சாது வாகத் தோன்றுகிறார். இவர் பெரிய புரட்சிக்காரர். பயங்கரமான புரட்சிக்காரர் அல்ல. இளமையிலேயே அதாவது மகாத்மா காந்தி சுதந்தரப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே இவருக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் ஆகாது.பிரிட்டிஷ்காரர்கள் இவரை

ஆபத்தான மனிதர் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள்.

அபுல்கலாம் என்பது இவருடைய பெயர். மெளலானா என்றால் தலைவர் என்று அர்த்தம். பொதுஜனங்களுக்கு இவரிடம் மிகவும் அன்பு ஏற்பட்டது. இவரைத் தம்முடைய தலைவர் என்று மதிப்பு வைத்துப் பாராட்டினார்கள். அவர்கள் அளித்த பட்டம் அது. ஆஸாத் என்றால் சுதந்தரம் என்று அர்த்தம். இவர் சின்ன வயசி லேயே கவிதையும் கட்டுரையும் எழுதி வந்தார். அப்போது தம்மு டைய பெயரைப் போடாமல் 'ஆஸாத்' என்ற புனைப்பெயரோடு எழுதி வந்தார். அது பிறகு இவருடைய சொந்தப் பெயரோடு ஒட்டிக்கொண்டது. மெளலானா அபுல் கலாம் ஆஸாத்தின் தகப்பனார் முகம்மத் கைருதீன் என்பவர்.அவர் ஒரு பெரிய படிப்பாளி.இஸ்லாம் மத சம்பந்தமாக பல புத்தகங்களை எழுதி இருக்கிறார்.அவர் மத குருவாக இருந்தார்.அவருக்கு ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள்