பக்கம்:விளையும் பயிர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையும் பயிர்

உண்டு. அவருடைய முன்னோர்கள் கூடப் பெரிய கல்விமான்க ளாக இருந்தார்கள்.

முகம்மத் கைருதின் டில்லியில் வாழ்ந்து வந்தார். 1857 ஆம்

வருஷம் இந்தியாவில் ஒரு சுதந்தரப் போர் நடந்தது. பிரிட்டிஷா

ருடைய படையில் இருந்த இந்தியப் படைவீரர்கள் அந்த‌ப் போரை நடத்தினர். அதை வெள்ளைக்காரர்கள், "சிப்பாய்க் கலகம்" என்று சொல்வார்கள். புரட்சிக்காரர்களை யெல்லாம் அப்போது பிரிட்டி ஷார் சிறிதும் இரக்கம் இல்லாமல் கொன்றனர்; அவர்கள் வீடுகளைக் கொளுத்தினர். டில்லியிலும் இத்தகைய அக்கிரமங்கள் நடந்தன. அக்காலத்தில் ஆஸாத்தின் தந்தையார் அங்கே இருக்க மனம் இன்றி அரேபியாவுக்குச் சென்றார். முகம்மதியர்களின் புனித ஸ்தலமாகிய மெக்காவில் தங்கி வாழ்ந்து வந்தார்.

மதநூல்களில் நிபுணராகிய அவருக்கு மெக்காவில் பல மாணாக்கர்கள் சேர்ந்தனர். ஒரு பெரிய படிப்பாளியின் பெண்ணை அங்கேயே கல்யாணம் செய்து கொண்டார்.அடிக்கடி இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் மெக்காவுக்கு யாத்திரையாகப் போவதுண்டு.

அப்படிப் போனவர்களில் கைருதீனுடைய சிஷ்யர்கள் பலர். அவர் கள் தம்முடைய ஆசிரியரை அணுகி, "நீங்கள் மறுபடியும் இந்தி, யாவுக்கே வந்துவிட வேண்டும்"என்று வேண்டிக்கொண்டார்கள்.

1888-ஆம்வருஷம் அபுல்கலாம் ஆஸாத் மெக்காவில் பிறந்தார்

1898-ஆம் வருஷம் இவர் தகப்பனார், தம் மாணாக்கர்கள் விருப்

பத்தை நிறைவேற்றினார்; அதாவது தம் குடும்பத்துடன் இந்தியா வுக்கே வந்துவிட்டார். கல்கத்தாவில் வசிக்கலானார்.

அபுல் கலாம் ஆஸாத்தின் தந்தையாருக்கு வெள்ளைக்காரர் நாகரிகத்தைக் கண்டால் அருவருப்பு ஏற்பட்டது. இங்கிலீஷ் பாஷையில் கூட அவருக்கு வெறுப்புத்தான். அவர் வீட்டில் எல்லாம் பழைய பாணியில்தான் இருக்கும். கீழே பாயை விரித், துத்தான் உட்காருவார். மேஜை நாற்காலி இல்லை. ராஜா வந்தா லும் சரி, மந்திரி வந்தாலும் சரி. அந்தப் பாயில்தான் உட்கார

வேண்டும். தம் பிள்ளையை அவர் இங்கிலீஷ் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவில்லை. தாமே அரபு பாஷையையும் பர்ஸிய மொழியையும் சொல்லிக் கொடுத்தார். வேறு வாத்தியார்களையும் கொண்டு கற்பிக்கச் செய்தார். 42