பக்கம்:விளையும் பயிர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெளலானா ஆஸாத்

ஆஸாத் பட்டாணியர் வீட்டுக்குப் போய்த் தம் வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டார். அவரோ, நீங்கள் எனக்கு வாத்தியார். என்னைக் கண்டிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. நீங்கள் என்னிடம் மன்னிப்பைக் கேட்க நியாயமே இல்லை. என் முட்டாள் தனத்தை நீங்கள் எடுத்துக் காட்டுவது எனக்குத்தானே நல்லது?" என்று சொன்னார். கடைசியில் ஆஸாத் அவரைக் கெஞ்சிச்

சாப்பிடச் செய்துவிட்டுத்தான் வீடு திரும்பினர்.

மெளலான ஆஸாத் 1905-ஆம் வருஷம் முதல் 1907-ஆம் வருஷம் வரையில் எகிப்தில் உள்ள கெயிரோ சர்வகலாசாலையில் படித்துப் பட்டம் பெற்றார். இளமையிலே இங்கிலீஷ் படியாமற் போனாலும் பிற்காலத்தில் தாமாகவே படித்துக் கொண்டார். மிகவும் சிறந்த ஆங்கில இலக்கியங்களைப் படித்து உணர்ந்தார். இவரிடம் இப்போது இருக்கும் ஆங்கில நாவல்கள், இந்தியாவில் வெகு சிலரிடமே இருக்கக் கூடும்.ஆஸாத் மிகவும் சிறிய வயசிலேயே கவிதை எழுதத் தெரிந்து கொண்டார். எவ்வளவு கடினமான விஷயத்தைக் கொடுத்தாலும் அதைப் பாட்டாகப் பாடிவிடுவார். 14 வயசு நடந்துகொண் டிருந்தபோதே இவர் கவிதைக்காகவே 'நெரேஜ் ஆலம்' என்ற உருதுப் பத்திரிகையை நடத்திவந்தார். இளங் கவிஞர்களெல்லாம் அதில் கவிதைகளை எழுதினர்.

அவ்வப்போது கவி சம்மேளனம் நடைபெறும். அப்போது பல கவிஞர்கள் கூடுவார்கள். கரடுமுரடான எதுகைகளை வைத் துப் பாடும்படி அவர்களுக்குச் சொல்வார்கள். இன்ன இன்ன வார்த்தைகளை இப்படி இப்படி வைத்துப் பாடவேண்டும் என் பார்கள். அப்படிப் பாடியவர்களுக்குள் கெட்டிக்காரருக்குப் பரிசு வழங்குவார்கள்.

இந்தச் சம்மேளனங்களுக்கு ஆஸாத் போவார். அவர்கள் போடும் நிபந்தனைகளின்படி பாட்டுப் பாடிக் காட்டுவரர்; பரிசைக் தட்டிக்கொண்டு போவார். சபையில் உள்ளவர்கள், இந்தச் சிறு பையன் இவ்வளவு கடினமான பாடல்களைப் பாடுகிறானே!இவனால் முடியுமா?"என்று சந்தேகித்தார்கள்.நாதிர்கான் என்ற பெரிய கவி ஒருவர் ஆஸாத் சொந்தமாகப் பாடுவார் என்று நம்பவே இல்லை. 'யாரோ, மறைவாக இருந்து சொல்லிக்கொடுக்கிறார்கள். இந்தப் பிள்ளையாண்டானுக்குப் பெருமை உண்டாகவேண்டும் என்று

T45