பக்கம்:விளையும் பயிர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்பது அதன் பொருள். அதில் எல்லாவிதமான விஷயங்களையும் பற்றி அலசிவந்தார். அதன் ஆசிரியர் யாரோ நிரம்பப் படித்த பெரியவர் என்று பலர் எண்ணிக்கொண் டிருந்தார்கள். க்வாஜா ஆல்டாப் ஹஸேன் ஹாலி என்ற பெரிய உருதுப் புலவர் ஒருவர் இருந்தார். அவர் ஸர் லையத் அகமத்கான் என்பவருடைய சரித் திரத்தைப் புத்தக உருவில் எழுதினார். அதைப்பற்றி ஒரு விரிவான மதிப்புரையை ஆஸாத் தம் பத்திரிகையில் வெளியிட்டார். சிறிதும் ஒளிவு மறைவில்லாமல் நூலிலுள்ள குற்றங்களையும் எடுத்துக் காட்டி அந்த மதிப்புரையை எழுதியிருந்தார். அதைப் பலர் படித்துப் பார்த்தார்கள். பலர் பாராட்டினார்கள், பலர் குறைகூறினார்கள். பலருடைய கவனத்தை அது கவர்ந்ததானா லும் அவர்களுக்கு ஆஸாத் இன்னாரென்றே தெரியாது. இவர் பதினாறு வயசுப் பையன் என்பது சிறிதும் தெரியாது.

லாகூரில் ஒரு சங்கம் இருந்தது. அதன் ஆண்டு விழா வில் பேசுவதற்கு ஆஸாதை அழைத்தார்கள். இவரை நேரில் அறியாவிட்டாலும் ஸானஸ் ஸிதிக் என்ற பத்திரிகையின் ஆசிரியர்-என்ற புகழ் ஏற்பட்டிருந்தது. ஆஸாதுக்குச் சிறிய கூட்டங்களில் பேசும் பழக்கம் இருந்தது. ஆனாலும் லாகூரில் இருந்த சபையைப் போன்ற சபையில் பேசியதில்லை.

சபையின் ஆண்டு விழாவிற்கு ஆஸாத் சென்றார். 1904-ஆம் வருஷம். இவர் பேசவேண்டிய விஷயமோ வயசில் முதிர்ந்த பெரியவர்கள் பேசுவதற்குரியது. "சமயத்துக்குப் பகுத்தறிவு ஆதாரம்' என்பதுதான் அந்த விஷயம். பெரிய சபை. கவிஞர் களும் பேரறிஞர்களும் எழுத்தாளர்களும் கூடியிருந்தனர். பெரிய கவிஞராகிய இக்பால் கூட்டத்துக்கு வந்திருந்தார். எந்தப் புத்த கத்துக்குத் தயை தாட்சிண்யமின்றி ஆஸாத் மதிப்புரை எழுதி யிருந்தாரோ அந்தப் புத்தகத்தின் ஆசிரியராகிய ஹாலேன் ஹாலியும் வந்திருந்தார். அவர் பெரிய கவிஞர்.

பிரசங்கம் செய்வதற்குமுன் சங்கத்தினர் அவரைக் கூட்டத் துக்கு அறிமுகம் செய்துவைத்தனர். இந்தப் பிள்ளையாண்டான பேசப்போகிறான்? அதுவும் இந்த நுணுக்கமான விஷயத்தைப் பற்றியா' என்று ஆச்சரியப்பட்டார்கள். ஹஸேன் ஹாலி, பத்திரிகாசிரியராகிய மெளலான அபுல் கலாம் ஆஸாத் வர வில்லைபோல் இருக்கிறது. இவர் அவருடைய பிள்ளை போலும்

47.