பக்கம்:விளையும் பயிர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையும் பயிர்

என்று நினைத்திருந்தார் ஆனால் அவரே அப்பத்திரிக்கையின் ஆசிரியர் என்பதைத் தெரிந்து கொண்டபோது அவருக்கு உண்டான ஆச்சரியத்துக்கு எல்லை இல்லை. "இந்தச் சிறுவனா என் புத்தகத்துக்கு அவ்வளவு விரிவான மதிப்புரை எழுதினான்", இவரைப் பார்த்துப் பார்த்து வியந்தார். ஆஸாத்தே ஆரம்பித்தார். அந்த நுணுக்கமான விஷயத்தைப் பேச இவ எவ்வகையிலும் தகுதியுள்ளவர் என்பதைக் காட்டினார் கொரனிலும் மற்ற மத நூல்களிலும் இவருக்கு எவ்வளவு ஆழமான, அறிவு இருக்கிறதென்பதைக் கூட்டத்தினர் அறிந்து ஆச்சரியப்பட்டனர். ஹுஸேன் ஹாலி அந்தப் பிரசங்கத்தைக் கேட்டு அப் படியே சொக்கிப் போய்விட்டார். "சின்ன உடம்பில் பெரிய மூளை' என்று பாராட்டினார்.

வரவர ஆஸாத்தின் அறிவு வளர்ந்து விரிவடைந்தது. நம் நாடு அடிமைப்பட்டுக் கிடப்பதை உணரலானார். பிரிட்டில் அரசாங்கத்தின் அக்கிரமங்களைக் கண்டு இவருக்கு கோபம் கோபமாக வந்தது. 1912-ஆம் வருஷம் ஆல்ஹிலால்' ஒன்ற பத்திரிக்கையைத் தொடங்கினார். மிகவும் காரசாரமாக எழுதிவந்தார். அந்த பத்திரிகைக்கு வரவர ஆதரவு அதிகமாயிற்று. முதலாவது யுத்தம் ஆரம்பித்த காலத்தில் இவரைப் பாதுகாப்பில் வைத்தார் கள். 1920-ஆம் வருஷம் வரையில் இவர் சிறையில் இருந்தார். பிறகு விடுதலை பெற்றார்.

பிறகு மகாத்மா காந்தியுடன் சேர்ந்து இந்தியாவின் சுதந் தரப் போராட்டத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் மகாசபையின் தலைவராக இரண்டு தடவை இருந்திருக்கிறார். இரண்டாவது உலகப்போர் நடந்துபோது இவர் சிறைப்பட்டார் காந்திக்கு இவரிடத்தில் தனி மதிப்பு இருந்தது.

இன்று ஆஸாத் இந்தியாவை அரசாட்சி செய்யும் தலைவர்களில் ஒருவர். மகா மேதாவி பல நூல்களுக்கு ஆசிரியர் மத சம்பந்தமான விஷயங்களில் இவர் பெரிய நிபுணர்.சின்ன வயசிலேயே அறிவிலும் தேச பத்தியிலும் பழுத்திருந்த இவர் இன்று சுதந்தர பாரதத்தின் கல்வி மந்திரியாக இருப்பது பொருத்தமானது.

48