பக்கம்:விளையும் பயிர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையும் பயிர் குழந்தை காந்தி

இந்தியா என்றால் உலகத்தில் அங்கங்கே உள்ள ஜனங்களுக்கு இரண்டு பொருள்கள் ஞாபகத்துக்கு வரும். இமயமலை இருக்கிறதே, அது ஒன்று. அதைப்போல உயர்ந்த மலை உலகத் திலே வேறு எங்கும் இல்லை. மற்றொன்று மகாத்மா காந்தியின் பெயர். ஒருகால் இமயமலை சில பேருக்குத் தெரியாமல் இருக்க லாம். ஆனால் மகாத்மா காந்தியைத் தெரியாத தேசமே இல்லை.

நம் இந்தியாப் படத்தில் இடப்பக்கத்தில் கிட்டத்தட்டப் பாதியில் காதுபோல ஒரு பாகம் இருப்பதைப் பார்க்கலாம். அந்த இடத்துக்குக் கூர்ஜரம் என்று பெயர். அங்கே வாழ்பவர்களைக் குஜராத்திகள் என்று சொல்வார்கள். அவர்கள் தாய்மொழி குஜராத்தி. அந்தத் தேசத்தில் பிறந்தவர் காந்தி மகாத்மா. போர் பந்தர் என்ற ஊரில் 1869-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி அவர் பிறந்தார். அவர் தகப்பனார் பெயர் கபாகாந்தி. அம்மா புத்லிபாய். காந்தி என்பது குடும்பப்பெயர். மகாத்மாகாந்தியின் முழுப்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பது. அதையே மோ. க. காந்தி என்று அவர் கையெழுத்துப் போடுவார். அவர் தமிழிலும் மோ. க. காந்தி என்று கையெழுத் துப்போட்டுக் கொடுத்திருக்கிறார்.

காந்தியின் அம்மா மிகவும் நல்லவள், தெய்வபக்தி உள்ளவள். நம்முடைய புராணங்களிலே உள்ள பெரியவர்களின் கதைக ளெல்லாம் அவளுக்குத் தெரியும். ஒவ்வொரு நாளும் சூரியனைக் கண்ணால் கண்டபிறகே சாப்பிடுவது என்று ஒரு விரதம் உண்டு. புத்லிபாய் அந்த விரதத்தை அநுஷ்டித்தாள். அந்த மாதம் வானத்தில் எப்போதும் மப்பும் மந்தாரமுமாகவே இருக்கும். சூரியன் தன் முகத்தைச் சுலபத்தில் காட்டமாட்டான். காந்தியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விளையும்_பயிர்.pdf/6&oldid=1412015" இலிருந்து மீள்விக்கப்பட்டது