பக்கம்:விளையும் பயிர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தை காந்தி

இல்லை. பக்கத்துப் பையனைப் பார்த்துக் காப்பி அடிக்கலாம் என்ற விஷயமே அவர் மனசுக்குத் தோன்றவில்லை. வாத்தியாரிடம் மற்றவைகளையெல்லாம் கற்றுக்கொண்டார். ஆனால் காப்பி அடிக்கும் விதத்தை அவர் கற்றுக்கொள்ளவில்லை.

குஜராத்தி பாஷையில் சிரவணஞநாடகம் என்ற ஒரு புத்தகம் உண்டு. சிரவணன் என்ற சிறுவன் தன் தாய் தகப்பனிடம் மிகவும் அன்பாக நடந்த கதையைச் சொல்வது அது. அவனுடைய அம்மா அப்பா மிகவும் கிழவர்கள். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கூடையில் வைத்துக் காவடி கட்டி, இரண்டு புறத்திலும் அந் த க் கூடைகளைக் கட் டி ச் சு ம ந் து கொண் டே போவானாம். ஒரு நாள் ஒரு காட்டில் அவன் தங் கினான். அம்மா அப்பா வுக்கு மிகவும் தாகமாக இருந்தது. பக்கத்தில் இருந்த குளத்தில் தண் ணீர் மொண்டு கொண்டு வரப் போனான். குறுகின வாயுள்ள பாத்திரத்தில் தண்ணீர் மொள்ளும் போது கொடக் கொடக் என்ற சத்தம் கேட்டது.

அப்போது அந்தக் காட்டில் வேட்டையாட வந்திருந்த தசரத மகாராஜாவின் காதில் இந்தச் சத்தம் விழுந்தது. ராம ருடைய தகப்பனாராகிய தசரத மகாராஜாதான் அவர். அங்கே ஏதோ காட்டு மிருகம் தண்ணீர் குடிக்கிறதென்று எண்ணிக் கொண்டு, அந்தப் பக்கமாக ஓர் அம்பை விட்டார். அது சிரவணன் மேல் பாய்ந்தது. "ஐயோ!" என்று கத்திக்கொண்டு விழுந்தான். தசரதர் ஓடிப்போய்ப் பார்த்தார். சிரவணன் ரத்த வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறான் தசரதர் அழுதார். ஐயோ, தெரியாமல்

விளை. 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விளையும்_பயிர்.pdf/8&oldid=1412018" இலிருந்து மீள்விக்கப்பட்டது