பக்கம்:விளையும் பயிர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையும் பயிர்

செய்துவிட்டேனே' என்று கதறினார். உயிர் போகிற தறுவாயில் இருந்தான் சிரவணன். அப்போதுகூட அவன் தன் தாய்தந்தையை மறக்கவில்லை. "மகாராஜா!, என் அம்மா அப்பா தாகத்தோடு துன்புறுவார்கள், நீர் அவர்களிடம் வேகமாய்ப் போய்த் தண்ணீர் கொடும்” , என்று சொல்லி உயிர் விட்டான். தசரதர் அந்தக் கிழவர்களிடம் போய் நடந்ததைச் சொன்னார். அவர்கள் கதறு கதறென்று கதறினார்கள்.

அந்தச் சிரவணன் கதையைக் காந்தி வாசித்தார். சிரவண னுடைய தாய் தகப்பனாரின் துக்கம் அவர் உள்ளத்தைக் கனியச் செய்தது. சிரவணனைப்போல அம்மா அப்பாவிடம் அன்பாக இருக்க வேண்டும் என்று உறுதி செய்துகொண்டார்.

அவர் ஒரு சின்ன நாடகத்தைப் படித்துப்பார்த்து ஈடுபட்டார். மற்றொரு நாடகத்தைக் கண்ணால் பார்த்து அதில் உள்ளத்தைப் பறிகொடுத்தார். அவர் வாழ்வு முழுவதும் சத்தியத்தைக் கடைப் பிடித்து வாழ்வதற்கு அந்த நாடகமே தூண்டுகோலாக இருந்தது. நாடு, மனைவி, மக்கள், பதவி எல்லாம் இழந்தாலும் சத்தியத்தை விடாமல் காப்பாற்றின ஹரிச்சந்திரன் கதையைச் சொல்லும் அரிச்சந்திர நாடகந்தான் அது. அந்த நாடகத்தைக் காந்தி மிகவும் ஆவலோடு பார்த்தார். அரிச்சந்திரன் பட்ட துன்பங்களை எண் ணும்போது அவரை அறியாமலே கண்ணீர் வரும். பெரியவரான பிறகுகூட அந்த நாடகத்தைப் படிக்கும்போது அவர் கண்ணீர் விடுவாராம்.

காந்திக்குப் பள்ளிக்கூடத்தில் ஒரு தோழன் ஏற்பட்டான். அவருடைய அண்ணாவுக்கும் அவன் தோழன். முதலில் அண்ணா வுக்குச் சிநேகிதன் ஆகிப் பிறகு தம்பிக்கும் தோழன் ஆனான். அவன் பீடி சிகரெட்டுப் பிடிப்பான், மாமிசம் சாப்பிடுவான்; ஏமாற்றுவான்; திருடுவான். இன்னும் என்ன வேண்டும்? பல சாலி. மாமிசம் சாப்பிட்டால்தான் உடம்பு பலமடையும். எந்தக் காரியத்தையும் செய்யலாம். 'ஙே' என்று இருக்கிறாயே, நீயும் மாமிசம் தின்றால் குண்டுக் காளை மாதிரி கொழுத்துப் போவாய். வெள்ளைக்காரர்கள் பலசாலியாக இருக்கிறார்களே, ஏன் தெரியுமா? மாமிசத்தைக் கண்டால் ஹூஹூம் என்று ஓடுவதில்லை; வயிறு நிரம்பச் சாப்பிடுவார்கள். அதனால்தான்

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விளையும்_பயிர்.pdf/9&oldid=1412019" இலிருந்து மீள்விக்கப்பட்டது