பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. எதிர் பாராக் கண்டுபிடிப்பு 'ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை கினையாத முன்வந்து கிற்கினும் நிற்கும் எனைஆளும் ஈசன் செயல்” (27) என்பது ஒளவையாரின் நல்வழிப் பாடல் எதிர் பாராதது சில கண்டுபிடிப்புகள் எதிர்பாராமல் நிகழ்வதுண்டு. எங்கோ ஒரு காட்டில் ஓர் ஆட்டிடையன் இரும்புப் பூண் போட்ட கோலை ஊன்றிக் கொண்டு சென்றானாம். இரும்புப் பூண் கீழே எதன்மேலோ பட்டதும் எடுக்க வரவில்லையாம். காந்தம் இழுக்கிறது எனக் காந்தம் கண்டுபிடிக்கப்பட்டதாம். இதே போல ஒரு காட்டில் மாடுகள் செடி கொடி களை மேய்ந்து கொண்டிருந்தனவாம்; சில செடிகளில் உள்ள இலைகளையும் காய்களையும் மேய்ந்தபின் உற்சாகம் பெருக்கெடுத்து அங்கும் இங்கும் ஓடியாடத் தொடங் கினவாம். இதைப் பார்த்தவர்கள் அந்தக் காய்களைப் பதப்படுத்தி உண்டு பார்த்தனராம். அவர்கட்கும் சோர்வு மறைந்து விருவிருப்பான உற்சாகம் ஏற்பட்டதாம். அந்தக் காய்தான் இப்போது நாம் உட்கொள்ளும் காஃபி சி. கொட்டையாம்.