பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 97 முதல் உலகப் போர் இந்தக் கால அளவில் முதல் உலகப் போர் மூண்டது. மார்க்கோனி இத்தாலியப் படையில் ஒரு படைஞராகச் சேர்ந்தார். இத்தாலியின் கம்பியில்லாத் தந்திமுறைப் படைக்குத் தலைவர் பொறுப்பு ஏற்றார். முசோலினியின் ஆதரவாளராகச் செயல்பட்டார். 1919 ஆம் ஆண்டு பாரிசில் கூடிய அமைதி (சமாதான) மாநாட்டிற்கு இத்தாலியப் பேராளராக (பிரதி நிதியாகத்) தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட பெருமைக்கு உரியவரானார் மார்க்கோனி. 1920 ஆம் ஆண்டு படகு விட்டில் இருந்து கொண்டு சில ஆய்வுகள் புரிந்தார். r 1920 ஆம் ஆண்டு முதல் வானொலி ஒலிபரப்பு கடந்தது. ஒலிபரப்பைக் கேட்க இலண்டன் ஆல்பர்ட் கூடத்தில் சுவைஞர்கள் பலர் கூடியிருந்தனர். டேம் QBösö GIDébut’ (Dame Nellie Melba) Störg)b Läft பெற்ற பாடகரைச் செம்ஸ்போர்டு என்ற இடத்திலிருந்து பாடவைத்தார் மார்க்கோனி. அந்தச் சுவையான பாடலை இராயல் ஆல்பர்ட் கூடத்தில் அமர்ந்திருந் தவர்கள் கேட்டு மிகவும் சுவைத்து மகிழ்ந்தனர். இது தான் முதல் ஒலிபரப்பாகும். 1922 நவம்பரில், இலண்டனில் ஒலிபரப்பும் வானொலி நிலையம் முதல் முதலாகத் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உலகெங்கும் வானொலி நிலையங்கள் படிப்படியாகப் பூத்து மலர்ந்து மணம் வீசிக்கொண் டுள்ளன.